
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி
வரை நடைபெற உள்ளது. இதில், தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம்
முதல் மற்றும் இரண்டாம் தாள் 4 தேர்வுகள், பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி
மாலை 4.45 மணி வரை நடைபெறும்.
இந்த நான்கு தேர்வுகளுக்கும் மாணவர்கள் பிற்பகல் ஒரு மணிக்கு தேர்வு
மையத்துக்கு வரவேண்டும்.
அதேபோன்று, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் காலை 10
மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடைபெறும் என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.