இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அறிவுறுத்தலின்படி, வரும்
ஜூலை மாதம் முதல் தொலைதூர முறையில், வேளாண் பட்டப்படிப்புகள் நடத்த தடை
விதித்து, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.பல்கலை மானியக்குழு
கண்காணிப்பில், நாட்டில் பல்வேறு பல்கலைகள், தொலைதூர கல்வி முறையை
செயல்படுத்தி வருகின்றன*
இதன் விதிமுறைகளின் படி, தொழில் சார்ந்த படிப்புகளான,
பொறியியல், மருத்துவம், பிசியோதெரபி, பல் மருத்துவம், பார்மசி, நர்சிங்,
ஆர்க்கிடெக்சர் உட்பட படிப்புகளை, தொலைதூர கல்வி முறையில் வழங்க இயலாது*
இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின்
அறிவுறுத்தலின் படி, வேளாண் பட்டப் படிப்புகளையும், தொலைதூர முறையில் வழங்க
தடை அறிவிக்கப்பட்டுள்ளது*
தொலைதூர கல்வி முறையில், 2019- - 20ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, ஜூலை மாதம் முதல் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது*
இத்தடை, ஜூலை மாதம் முதலே நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது*
இதன் படி, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், தொலைதூர கல்வி
முறையில் வேளாண் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.







