தூக்கத்தின் போது தான் குழந்தைகளின்
தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். இதில் இதயமும் அடக்கம்.
போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.
குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம்.
சரியாகத் தூங்கினால்தான் அவர்களால் கனவுகள் காண முடியும். கனவுகள்
அவர்களுடைய கற்பனைகளை விரிக்கும். தூங்கும்போது பகலில் நிகழ்ந்த
சம்பவங்களின் நினைவுகளை மூளையானது சேகரித்து வைக்கும்.







