அரசு மேல்நிலைப் பள்ளி எடுத்தவாயநத்தம்,விழுப்புரம் மாவட்டம்.
மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில் புதிய சாதனை படைத்துள்ளன.பிளஸ் 2
தேர்வு முடிவு நேற்று வெளியானது. கடந்தாண்டை காட்டிலும், தேர்ச்சி விகிதம்
குறைவு என்றாலும், கிராமப்புற அரசு பள்ளிகள் புதிய சாதனை படைத்துள்ளன.
கடந்தாண்டு, 85 சதவீதம் பெற்றிருந்த, எடுத்தவாய்நத்தம் அரசு
மேல்நிலைப்பள்ளி, இந்தாண்டு, முதன் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.கா.மணி அவர்கள் இந்த சாதனை பற்றி கூறும்பொழுது ஆசிரியர்களின் கடுமையான உழைப்பும்,மாணவர்களின் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் இதற்கு முழு காரணம் ஆகும்.வருடம் ஆரம்பத்தில் இருந்தே மாணவர்களுக்கு பள்ளி நேரம் போக காலை மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது .சிறப்பு வகுப்பில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு அவர்கள் உடல் ரீதியாக தொய்வு அடையா வகையில் பார்த்துக்கொள்ளப்பட்டது.மாணவர்களின் மனவலிமையை அதிகரிக்கும் வகையில் சிறப்பு தன்னம்பிக்கை கருத்தரங்கம் மூன்று முறை நடத்தப்பட்டது.இதன் வாயிலாக 100% தேர்ச்சி எளிமையானது எனக்கூறினார் . தலைமை ஆசிரியர் திரு.மணி அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகள் தெங்கியாநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 100சதவீதம் தொடர்ந்து தேர்ச்சியை வழங்கியுள்ளார்.இப்பள்ளியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியை தந்துள்ளார் ஆக தொடந்து ஐந்து ஆண்டுகள் 100% தேர்ச்சியை தந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது.














