வாக்களிப்பின்போது பயன்படுத்தப்படும் ஆவணமான வாக்காளர் அடையாள
அட்டையை தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக வாக்காளர் பட்டியலில்
பெயர்களைச் சேர்த்தவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து
இலவசமாக அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டையைத் தொலைத்தவர்களும், புதிதாக
புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெற விரும்புவோரும்
தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் இருந்து ரூ.25 கட்டணம் செலுத்தி
பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவை மையங்கள் இயங்கக் கூடிய
இடங்கள் குறித்த விவரங்களும் தேர்தல் துறை (www.elections.tn.gov.in)
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...