"இயக்கச் செம்மல்" "அண்ணன" "மாவீரன்" என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் வணங்கும் ஜே.எஸ்.ஆர். என்று எல்லோரும் அழைக்கும் அண்ணன் ஜே.எஸ்.இராசு அவர்களின் நினைவு நாள் இன்று;. அவர்களை நினைத்து இயக்கத்திற்காக செய்த தியாகங்களை என்னி மரியாதை செய்வோம். மதுரை மாவட்டம் திருமங்கலம் _ உசிலம்பட்டி இடையிலுள்ள வாகைக்குளத்தில் 26.12.1934 ல் சொக்கலிங்கம் அவர்களின் மகனாகப் பிறந்தார்.
இவர் இராமாயி அம்மாளை திருமணம் முடித்து ராஜ்குமார் மற்றும் கதிரவன் எனும் இரண்டு மகன்களை குழந்தை செல்வமாக அடைந்தனர்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போதே திருவள்ளூர் கழக தலைவர் ஆனார்.
1955ல் மதுரை அரசரடியில் உள்ள திரவியம் தனியார் பள்ளியில் பயிற்சி பெறாத ஆசிரியராக பதவி ஏற்றார்.
1958 ல் தே.கல்லுப்பட்டியில் அரசினர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஈராண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
மதுரை மாநகராட்சி பள்ளியில் பணிபுரிந்தார்.
1958ல் ஆசிரியர் தொகுதி மேலவை உறுப்பினர் திரு ஜி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயக்க நிறுவனர் மாஸ்டர் பற்றி கூறியதை ஏற்று மாஸ்டர் அவர்களை சந்தித்து நமது பேரியக்கத்தில் இணைந்தார்.
மாஸ்டர் அவர்களுடன் நெருங்கிப்பழகி அவரது அன்புத் தம்பியாக இயக்கப்பணியாற்றினார்.
ஆசிரியர் மாணவர் விகிதம் உயர்த்தியதை எதிர்த்து நாடுதழுவிய அளவில் மிதிவண்டி பேரணி சிறப்பாக நடத்தி மாஸ்டர் அவர்கள் இதயத்தில் நிலையான இடம் பெற்றார்.
1962 ல் 5 வது மாநில மாநாடு தேசிய பாதுகாப்பு மாநாடாக சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்து ஆசிரியர்களின் நாட்டுப்பற்றை உலகறியச் செய்தார்.
1970ல் மாஸ்டருக்கு மணிவிழா மாநாடு மதுரை யில் நடத்தினார்.
1972ல் கல்வி எழுச்சி நாள் கொண்டாடப்பட்டு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் செய்து 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
1973 ல் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1974 ல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணி பாதுகாப்புக்கு வழிகண்டார்.
1975 ல் நமது பேரியக்கத்தை அகில இந்திய ஆசிரியர் கூட்டணியில் இணைத்து இயக்க காவலர் அய்யா சு.ஈசுவரன் அவர்களை பொதுச்செயலாளராக செயல்பட செய்து புதுடெல்லி மாநாட்டில் கலந்து கொள்ள செய்தார்.
1976 ல் மத்திய துணை கல்வி அமைச்சர் பங்கேற்க சென்னை மில் பிரதிநிதிகள் மாநாடு.
ஜூலை மாதத்தில் 7 வது மாநில மாநாடு. பெல்சு சாலையில் மாநில அலுவலகம் ஏற்பாடு.
1977 ல் 3 வது ஊதியக்குழு இயக்கம் சார்பில் அறிக்கை அளித்தது,
1978 ல் இடைக்கால நிவாரணம் பெற்றது.
1979 ல் தமிழக முதல்வர் எம்ஜிஆர் கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் பல்வேறு மொழி பேசும் ஆசிரியர்கள் பங்கேற்க இயக்க காவலர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் இயக்க காவலருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி மாநாடு வெற்றி பெறச்செய்தார்.
இயக்க காவலர் அய்யா சு.ஈசுவரன் அவர்களை பொதுச்செயலாளராக்கி அழகு பார்த்தவர்.
மாநில தலைவராக ஜே.எஸ்.ஆர் யுகம் பொதுச்செயலாளராக சு.ஈஸ்வரன் அவர்களும் உடன்பிறவா தேடல் அண்ணன் தம்பிகளாக உணர்வு ஒற்றுமை கருத்து ஒற்றுமை செயல் ஒற்றுமை ஆகியவைகளால் செயல்பட்டு நமது பேரியக்கத்தின் பொற்காலத்தை சகாப்தமாகப் படைத்தார்கள்.
8 முறை சிறை சென்று தியாக வேள்வியில் குளித்த தியாகசீலர்.
மாஸ்டர் அவர்களால் தம்பி என்று அன்பாக அழைக்கப்பட்டவர்.
சோம்பலை சாம்பலாக்கி
சோர்வரியாக்காவலன்.
செயலுக்கு ஊக்கம் அளித்த மன்னன்.
வராது வரக்கிடைத்த வைரமாமணி.
தலைமைக்கு இலக்கணம் வகுத்த அண்ணன்.
சோராது சேவை செய்த இயக்க செம்மல்.
இவ்வாறாக இயக்கப்பணியாற்றி 07.04.2001 ல் இயக்க கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய நேரத்தில் அன்று இரவில் இயற்கை எய்தினார். அண்ணன் அவர்கள் மறைந்தாலும் அவர் புகழ் இயக்கத்திற்கு ஆற்றிய பணி என்றும் மறையாது. (நன்றி நாகை மாவட்ட மாநாட்டு மலர்).
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்றென்றும் அண்ணன் ஜே.எஸ.ஆர் அவர்களையும் அவர்களின் பணியையும் நினைத்து போற்றி அவர்கள் வழி நடப்போம் என உறுதி ஏற்போம்.