TNTET - தேர்வுக்கு விண்ணப்பம் அவசியம் செய்து தேர்ச்சி பெற முயற்சிகள் மேற்கொண்டு ஏற்கனவே உள்ள பணியை தக்கவைத்துக் கொள்ளுங்கள். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNTET - தேர்வுக்கு விண்ணப்பம் அவசியம் செய்து தேர்ச்சி பெற முயற்சிகள் மேற்கொண்டு ஏற்கனவே உள்ள பணியை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

RTE act 2010 அடிப்படையில் TNTET கட்டாயம் என்ற நிபந்தனைகள் பற்றி தெரியாமல் உள்ள பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் : - தெளிவுப்பதிவு.
கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 ல் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் RTE சட்ட அமலாக்கம் பெற்று 23/08/2010 ல் மத்திய அரசு வெளியிட்டது.
இதனை ஒரு சில மாநிலங்கள் மட்டுமே ஆரம்பத்தில் ஏற்று   அமலாக்கங்கள் அந்தந்த மாநிலங்களில் அரசாணைகளாக வெளியிட்டன.
தமிழகத்தில் 15/11/2011 ல் அரசாணை எண் 181 வடிவில் RTE சட்டம் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெளிவந்தது .
இதில் ஆசிரியர் நியமனங்கள் குறித்த விளக்கம் RTE சட்ட அமலாக்கம் மத்திய அரசு தேதியையே சாரும் என குறிப்பிடப்பட்டது.
அதாவது 23/08/2010 க்கு பிறகு பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் பெறுபவர்கள் அனைவருக்கும் TNTET கட்டாயம் என்ற நிபந்தனை வட்டத்தில் கொண்டு வரப்பட்டனர்.
இதன் முழுமையான திரட்டு கூறுவது யாதெனில்....
1) ஒருவர் 23/08/2010 க்கு பிறகு புதிதாக  பட்டதாரி ஆசிரியர் பணியில் அல்லது இடைநிலை ஆசிரியர் பணியில் ( அரசு ) சேர்ந்தாலோ,
2) 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியிடம் அல்லாத அரசு பணியிடத்தில் இருந்து ஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்றாலோ,
 3)  23/08/2010 க்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலோ ...
4) 23/08/2010 க்குப் பிறகு சத்துணவு பணியில் இருந்து பயின்று  இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலோ...
5) சிறுபான்மையினர் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு  ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் ( TET வழக்கு இன்னும் மேல்முறையீீட்டு ( Supreme Court ) வழக்கு நிலுவையில் உள்ளதால் )
குழந்தைகள் RTE ACT அடிப்படையில் அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் TNTET கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்ற நிலை இருந்தது.
இது மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு 2019 மார்ச் 31 வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது.
RTE ACT புரிதல் இல்லாமல் கடந்த 8 வருடங்களாக தான்தோன்றித் தனமாக செயல்பட்டுவரும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் , ஒவ்வொரு கல்வி மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு முடிவுகள் எடுத்து ஆசிரியர் பணி நியமனங்கள், மற்றும் RTE act பற்றிய புரிதல் இல்லாமல் பதவி உயர்வு போன்ற பல்வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு அனுமதி அளித்துவிட்டனர்.
 இந்த நிகழ்வுகள் அதிகமாக அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் அதிகம் நடைபெற்றது தற்போதுதான் தெரிய வந்துள்ளது.
RTE ACT 2009 அடிப்படையில் நடைபெற வேண்டிய முறையான ஆசிரியர் நியமனங்கள் , TET கட்டாயம் என்ற நிபந்தனைகளுடனோ  அல்லது  நிபந்தனைகள்  குறிப்பிடாமலோ பதவி உயர்வு பெற்றவர்கள் யாராயினும்  23/08/2010 க்கு  பிறகு பணி  நியமனம் அல்லது பதவி உயர்வு  பெற்று    இருப்பின்   தற்போது அறிவித்துள்ளது  TNTET க்கு  விண்ணப்பம்  அவசியம்  செய்து தேர்ச்சி பெற முயற்சிகள்  மேற்கொண்டு  ஏற்கனவே உள்ள பணியை   தக்கவைத்துக்
கொள்ளுங்கள்.
அரசு கல்வித்துறை  உயர்  அதிகாரிகள்  மற்றும்  சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கும்  இந்த புரிதலை முறையாக கொண்டு  சேர்க்க தமிழக அரசு  முன் வர வேண்டும்.  பணியில்  உள்ள ஆசிரியர்கள்   பணிப்  பாதுகாப்பு  சம்மந்தமான  ஒரு நல்ல தீர்வும் விரைவில் எடுக்கப்பட வேண்டும்.
( 23/08/2010க்கு  முன்பு சான்றிதழ்  சரிபார்ப்பு  உள்ளிட ஆசிரியர் பணியிட நிரப்புதல் செயல்பாடுகள் நடைபெற்று இருந்தால் மட்டுமே TET லிருந்து  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது   )

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H