பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான இடங்களுக்கு இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்நிலையில், விண்ணப்பப் பதிவு தொடங்கியது முதல் தற்போது வரை பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்புக்கு 7,488 மாணவர்களும், பி.டெக் படிப்புக்கு 1,268 மாணவர்களும் விண்ணப்பித்திருப்பதாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 9 -ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 9- ஆம் தேதி பிவிஎஸ்ஸி - ஏஹெச் (சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்பிரிவு), பிடெக் (சிறப்பு பிரிவு) ஆகிய படிப்புகளுக்கும், ஜூலை 10 ஆம் தேதி பிவிஎஸ்ஸி- ஏஹெச் (கலையியல் பிரிவு) படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியின தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஜூலை 11 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.








