*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 2⃣7⃣-0⃣6⃣-1⃣9⃣ - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 2⃣7⃣-0⃣6⃣-1⃣9⃣

இன்றைய திருக்குறள்*

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.

*மு.வ உரை*
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

*கருணாநிதி  உரை*
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.

*சாலமன் பாப்பையா உரை*
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின்னே வரும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important Daily Used Words - Parts Of Body*

Ankle கணுக்கால்

Snout பிராணிகளின் மூக்கு

Nerve நரம்பு

Hand கை

Leg கால்

🍀🌿🎋🍀🌿🌿

*இன்றைய மூலிகை*

*வில்வம்*

காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.

✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1.கோபால கிருஷ்ண கோகலேயின் இயற்பெயர் என்ன ? 

*கோபாலன்*

2. சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ? 

*சோடியம் குளோரைடு*

3. இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் ? 

*மக்கோகன் எல்லைக்கோடு*

4.எம்ஜிஆர் பிறந்த ஊர் எது ? 

*மருதூர்*

5. வறுமை ஒழிப்புத் தினம் எப்போது ? 

*நவம்பர் 1*

✒✒✒✒✒✒✒✒

*நூலாசிரியர் - நூல்கள்*

தமிழ்நாடு – வரதராஜீலு நாயுடு.

மணிக்கொடி – பி.எஸ். ராமையா.

எழுத்து – சி.சு.செல்லப்பா.

குடியரசு, விடுதலை – பெரியார்.

திராவிட நாடு – அண்ணா.

தென்றல் – கண்ணதாசன்.

சாவி – சா. விஸ்வநாதன்.

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Relative Pronouns – உரிச் சுட்டுப்பெயர்கள்*

ஒரு வாக்கியத்தின் உற்பிரிவாகவோ அல்லது இரண்டு வாக்கியங்களின் இணைப்புச் சொல்லாகவோ பயன்படுபவைகள்.

who
whom
that
which
whoever
whomever
whichever

உதாரணம்:

I told you about a woman who lives next door.

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் இலக்கணம்*

*வேர்ச்சொல்*

ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்..

‘பார்’ என்பது ஒரு வேர்ச்சொல்.இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*புதிர் கதை*

அறையில் விளக்குகள்
 ஒரு அறையில் மொத்தம் 100 விளக்குகள். ஒன்று, இரண்டு, மூன்று என 100 வரை குறியிடப்பட்டிருந்தது. 

 ஆரம்பத்தில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது. குறும்பு பையன் அரவிந்த் விளக்குடன் விளையாட ஆரம்பித்தான். முதலில் எல்லா விளக்குகளையும் எறிய செய்தான். 

 பிறகு 2-ன் மடங்கு குறியிடப்பட்டுள்ள விளக்குகளை எல்லாம் (2, 4, 6, 8... ) அணைத்துவிட்டான். 

 அடுத்ததாகஇ மூன்றும்இ அதன் மடங்கு (3, 6, 9 , 12... ) குறியிட்ட விளக்குகளை அணைத்துவிட்டான். அணைந்திருந்த விளக்குகளை எறிய விட்டான். 

 மறுபடியும் இதே முறையில் நான்கும்இ அதன் மடங்கு (4, 8,12 , 16... ) குறியிட்ட விளக்குகளை அணைத்துவிட்டான். அணைந்திருந்த விளக்குகளை எறிய விட்டான். 

இந்த முறையையே 5, 6, 7 ..... 100 என குறியிடப்பட்டுள்ள மற்ற விளக்குகளுக்கும் பின்பற்றினான். முடிவில் எந்த குறியிடப்பட்டுள்ள விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்? 

*விடை*

கடைசியில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள் :
1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81 மற்றும் 100 

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮2017 18 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு

🔮வங்கக்கடலில் 30ஆம் தேதிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

🔮ஐ.நா. சபையில் பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவிற்கு இந்தியாவை பாகிஸ்தான் ஆதரித்துள்ளது.

🔮தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது வானிலை மையம் அறிவிப்பு.

🔮ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் தேச நலனுக்காக நாங்கள் செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

🔮 நிதி ஆயோக் தலைவரின் பதவிக்காலம் மேலும் இரண்டாண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

🌿🍀🎋🌿🍀🌿🍀

*தொகுப்பு*

T.THENNARASU,
S.G.TEACHER,
TN DIGITAL TEAM,
PUMS, KATTUR,
THIRUVALLUR DT.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H