பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28.06.19 : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28.06.19 :

திருக்குறள்

திருக்குறள்:227

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

விளக்கம்:

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.

பழமொழி



A good reputation is a fair estate

நற்குணமே சிறந்த சொத்து.

இரண்டொழுக்க பண்புகள்

1. உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் எனவே என் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை எப்போதும் வளர்த்து கொள்வேன்.

2. நல்ல எண்ணங்கள் வளர்த்து கொள்ள நல்ல புத்தகங்கள் வாசிப்பேன்.

பொன்மொழி

விதை மரமாகும் வரை அமைதியாக வளரும் ,அதே மரம் சாயும் போது பலத்த ஓசை எழுப்பும் ....
மனித வாழ்க்கையில் மரம் ஓர் பாடம்.

 ..... கன்பூசியஸ்.

 பொது அறிவு

1. முதல் இரும்பு கப்பலை தயார் செய்தவர் யார்?

வில்கின்சன்.

2. எல் கேஜி வகுப்பு முதல் பிஎச்டி படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வியை அறிவித்துள்ளவர் யார்?

பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்.

English words & meanings

1. Oar - a flat pole used for rowing boat, படகு செலுத்தும் துடுப்பு

2. Occupy - to live in or fill in, நிரப்புதல், குடியிருதுதல்.

ஆரோக்ய வாழ்வு

சிகப்பு அரிசி இருதய நாேய்களை தடுக்க உதவுகிறது.

Some important  abbreviations for students

IIT - Indian Institute of Technology

NIT - National Institute of Technology

நீதிக்கதை

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.

சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்!

சரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…

சீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.

உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.

அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…,” சொல்லி கும்பிட்டான்.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.

அதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.

அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!

துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!

அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா…  இந்தா  உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.

சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.

இப்போது அந்த துறவி கேட்டார்…

“என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்!

எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!


*வெள்ளி*

சமூகவியல் & விளையாட்டு

சமூகவியல்

இந்தியப் பெருங்கடலின் மொத்த பரப்பளவு 73,440,000 சதுர கிலோமீட்டர்.
உலகின் மூன்றாவது பெரிய நீர்நிலை.
பூமியின் மேற்பரப்பில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை உள்ளடக்கிய  நீர்நிலை.
இந்தியப் பெருங்கடல் நான்கு கண்டங்களை (ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா) எல்லைகளாகக் கொண்டது.

பாரம்பரிய விளையாட்டு - 2

பாரம்பரிய விளையாட்டு - 2 ஐ காண இங்கே கிளிக் செய்யவும்

கடந்த வாரம் பதிவிட்ட "ஒரு குடம் தண்ணி ஊத்தி" விளையாட்டு காணொலியாக .... பொள்ளாச்சி அரசு பள்ளி மாணவிகளின் பங்கேற்பில்

இன்றைய செய்திகள்

28.06.2019

* தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.

* புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

* தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது. மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 288 இடங்களுக்கு 1,458 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருக்கின்றனர்.

* உலக கோப்பை கபடி போட்டித் தொடர்  மலேசியாவில் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில்  இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்கின்றன. இரு பிரிவிலும் இந்தியா களமிறங்குகிறது.

* உலக கோப்பைக் கிரிக்கெட் :

Today's Headlines

🌸The Union Minister said that the time allowed for public comment on the draft of the National Education Policy would be extended by a further month.

 🌸All coins in circulation are legal.  The Reserve Bank of India has announced that no one should refuse to buy it.

 🌸 Engineering consultation for various section started. Out of a total  5 thousand 288 seats, only 1,458 have applied.

 🌸The World Cup Kabaddi Tournament begins in Malaysia on July 20.  The event will feature 32 teams from India, Pakistan and England and 16 from women's teams.  India is fielding in both categories.

 🌸World Cup Cricket:

Prepared by
Covai women ICT_போதிமரம்


Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H