புதுக்கோட்டை மாவட்டத்தில் இறைவணக்க கூட்டத்தை திங்கள்கிழமை
தவிர மற்ற நாட்களில் வெளியே நடத்த வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் வனஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள
சுற்றறிக்கையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
திங்கட்கிழமை மட்டும் இறைவணக்க கூட்டத்தை, குறைந்த நேரத்தில் வெளியில்
நடத்த வேண்டும். மற்ற நாட்களில் இறைவணக்க கூட்டத்தை வகுப்பறைக்கு உள்ளே
நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







