ஸ்..ப்பா... என்னா வெய்யிலு?' என்று
மனதிற்குள்ளேயும், உடலுக்குள்ளேயும் புழுங்கிக் கொண்டு இருப்பதால் ஒரு
பயனும் கிடையாது. கோடைக்காலம் முடிவுக்கு வந்தாலும் சென்னை போன்ற
மாநகரங்களில் வெய்யிலின் தாக்கம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கவே
செய்யும் என்கிறது வானிலை அறிக்கை.
அதுவே இயல்பான வெளிர் நிறத்தில் இருந்தால் பெரிய அளவில் பிரச்சனை இல்லை.
வெயில் காலங்களில் கூடுமானவரை சூடான பானங்களை அருந்துவதை தவிர்த்து
விடுங்கள். காபி, டீ போன்றவைகளுக்கு பதிலாக இளநீர்,மோர்,பழச்சாறு என்று
அருந்தி வரலாம்.
வயதானவர்களை கூடுமானவரை வெய்யிலில் அனுப்பாதீர்கள். அப்படியும் அவசியம்
ஏற்பட்டால், தனியே அனுப்பாமல் உடன் செல்லுங்கள்.
