காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 0⃣2⃣-0⃣7⃣-1⃣9⃣ - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 0⃣2⃣-0⃣7⃣-1⃣9⃣



🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻



*இன்றைய திருக்குறள்*

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கட் பெறின்.

*மு.வ உரை*
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

*கருணாநிதி  உரை*
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

*சாலமன் பாப்பையா உரை*
பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.
--அப்துல் கலாம்

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important Daily Used Words - Household*

Knitting Needle பின்னும் ஊசி

Flagon சொம்பு

Pincer இடுக்கி

☘🍀🌿☘🍀🌿🎋☘

*இன்றைய மூலிகை*

*சோற்றுக் கற்றாழை*

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?

*வோலடைல்*

2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?

*கங்காரு எலி*

3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?

*ஏழு*

4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?

*330*

5. தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?

*மக்ரானா*

✒✒✒✒✒✒✒✒
செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

“கண்மூடி பழக்க மெல்லாம் மண் மூடிபோக வேண்டும்” – வள்ளலார்.

“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் தம் உறவு கலவாமை வேண்டும்” – வள்ளலார்.

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” – வள்ளலார்.

“எல்லோரும் இன்பற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” – தாயுமானவர்.

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Prepositions / முன்னிடைச்சொற்கள்*

முன்னிடைச்சொற்கள் எப்பொழுதும் பெயர்சொற்களுக்கும் மற்றும் சுட்டுப்பெயர்களுக்கும் முன்னால் மட்டுமே பயன்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். (வினைச்சொற்களுக்கு முன்னால் பயன்படுவதில்லை.)

எடுத்துக்காட்டாக:

Subject + to be + Preposition + Noun/Pronoun 

The book is + on + the table.
The letter is + under + your English book.

"முன்னிடைச்சொற்கள்" தனித்த ஒற்றைச் சொல்லாகவும், கூட்டுச் சொற்களாகவும் இரண்டு வகையில் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டு:

*ஒற்றை முன்னிடை சொல் (one word)*

I am staying at home.
I spoke to her on wednesday morning.
I bought this computer in the summer.

*முன்னிடை கூட்டுச்சொற்கள் (a group of word)*

The cat is on the left of the dog.
The driver is in front of passengers.
They are at the top of stairs.

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் இலக்கணம்*

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல்

கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.கொடுக்கப்படும் வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்க வேண்டுமெனில் ரகர-றகர, லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகளை ஆகியவற்றை அறிந்திருத்தல் வேண்டும்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*கட்டுக்கதை*

 யுத்தத்தில் தங்களது இரண்டு கை கால் இழந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக மன்னர் ஷாஜஹான் அறிவித்தார். அப்போது ஒருவன் மன்னரிடம் வந்து மன்னா உதவித்தொகை பெற வேண்டும் என்பதற்காக ஒரு கையை இழந்த ஒருவன் தனது இன்னொரு கையையும் வெட்டிக் கொண்டான் என்றார். இதைகேட்டு மன்னர் அதிர்ச்சி அடையவில்லை. அதற்கு மாறாக வாய்விட்டு சிரித்தார். அது ஏன்? 

*விடை*
ஒரு கையை இழந்தவன் எப்படி தனது இன்னொரு கையை தானே வெட்டிக் கொள்ள முடியும். அதனால் தான் இது கட்டுக்கதையாக இருக்கு வேண்டும் என்று நினைத்து மன்னர் ஷாஜஹான் சிரித்தார். 

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮 ஈரான் அளவுக்கதிகமாக யூரேனியம் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.முகமை அறிவிப்பு.

🔮தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக IAS  அதிகாரி கிருஷ்ணன் அவர்களை நியமித்துள்ளது.

🔮 நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க 'ஜல்சக்தி அபியான்'திட்டம்: இன்று தொடக்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்.

🔮 பெட்ரோல் பங்குகள் மூலம் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் வசதி: மத்திய அரசு புதிய திட்டம்.

🔮 கடந்த சில நாட்களாக வீசும் பலத்த காற்று.. தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிப்பு

🔮 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய அணியின்  விஜய் சங்கர் காயம் காரணமாக விலகல்.

☘🌿🍀🎋☘🌿🍀☘

*தொகுப்பு*

T.THENNARASU,
TN DIGITAL TEAM,
R.K.PET BLOCK,
THIRUVALLUR DT.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H