2. வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்தாலோ, பாலியல் தொழில் தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டாலோ குற்றமாக கருதப்படும். ( பாலியல் சம்பந்தமாக வீடியோ சில வன்முறைகள் பற்றிய தகவல்களை சற்று காலம் முன்பு இரண்டொரு நபர்கள் பகிர்வு செய்தீர்கள்... தயவுசெய்து இக்குழுவில் உள்ள நபர்கள் இனிமேல் இதையெல்லாம் தவிர்க்கவும்)
3. அரசியல், சினிமா,விளையாட்டு என எந்த துறையைச் சேர்ந்த முக்கியமானவர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தால் குற்றமாகும்.
குறிப்பாக முகத்தை மாற்றி செய்யப்படும் மார்ஃப்டு வேலைகளுக்கு தண்டனை உண்டு என்கிறது சட்டவிதி.
*(நமது குழுவில் உள்ள அட்மின்கள் ஜாதி, இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். தங்களது பகிர்வும் அவ்வாறே இருக்க வேண்டும்)*
4.பெண்களுக்கு வாட்ஸ் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்தாலோ, பாலியல் ரீதியாக பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினாலோ தண்டனை நிச்சயம். குறிப்பிட்ட புகாரின் படி வாட்ஸ் அப் சாட்கள் ஆதாரமாக கொள்ளப்படும்.
5. பேஸ்புக், ட்விட்டரில் பேக் ஐடி போல, ஒரு எண்ணை வேறொருவர் எண்ணாக பாவித்து வேறொருவர் பெயரிலேயே வாட்ஸ் அப் கணக்கை நடத்தினாலும் குற்றம்.
6. குறிப்பிட்ட எந்த இனம், மதம், மொழி சார்ந்த எதிர்ப்பு கருத்துகளை வாட்ஸ் அப்பில் பகிரக்கூடாது. வன்முறையை தூண்டுவது மாதிரியான எந்தக்கருத்துகளை பகிர்ந்தாலும் அது குற்றமாகவே கருதப்படும்.(அதனால் நண்பர்களே சமூகத்தில் குற்றமாகக் கருதப்படும் எந்தவொரு பகிர்வையும்@அது நியாயமாக இருந்தாலும் பகிரக்கூடாது)
7. வதந்திகளை பரவுதல் என்பது வாட்ஸ் அப்பில் எளிதாக நடந்தேறி வருகிறது. வாட்ஸ் அப் வதந்திகள் பல உயிர்களையும் காவுவாங்கி வருகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும், வதந்திகளையும் பரப்பினால் அது குற்றமாக கருதப்படும்
8. வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டாலோ, போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து ஊக்கப்படுத்தினாலோ கைது நிச்சயம்
9. மறைமுகமாக எடுக்கப்பட்ட வீடியோக்களையோ அல்லது ஒருவர் அனுமதியின்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை பகிர்ந்தாலோ குற்றமாக கருதப்படும். எ.கா கடந்த நாட்களில் நமது குழுவில் டிராபிக் போலீசு வெர்சஸ் வாகன ஓட்டி, அப்புறம் ஆளும்கட்சி க்கு எதிராக வடிவேலு காமெடி, குடிகாரன் தான் குடிப்பதை நியாயப்படுத்தும் வீடியோ, பணி மாறுதல் சம்பந்தமாக எதிர்மறை உணர்வு.... போன்ற இன்னும் சில...
10. ஆபாச படங்களை பரப்புதல், ஆபாசம் தொடர்பான பொருட்கள் குறித்து விவாதம், விற்பனை ஆகியவை வாட்ஸ் அப்புக்கான எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கும் தண்டனை சாத்தியம்.
11. நமது குழுவில் உள்ள உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் அனுப்பும் பகிர்வு @ வீடியோ, படங்கள், கருத்துக்களை பாருங்கள். அவை எவ்வளவு நமக்கு சந்தோசத்தைத் தருகிறது. அது போல உங்களது பகிர்வும் இருக்க வேண்டும்.
நல்ல ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை நமது சமூகத்திற்கு பயன்படும் வகையில் பகிர்வு செய்யுங்கள் @ நடராஜன் சார் பாருங்கள்.... எவ்வளவு அருமையான கல்வி செய்திகள்... சபீராபானு டீச்சர் பாருங்கள்... சிந்தனைகளைத் தூண்டும் வகையில் என்ன அருமையான பதிவுகள்... அதே போல மற்றும் பல நண்பர்கள் பகிர்வுகள்... இதுபோன்ற விசயங்களை பொதுமக்களுக்கு @ நமது குழுவின் நண்பர்களுக்கு பகிர்வு செய்யுங்கள். அவர்கள் பயன் பெறட்டும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
🌹 *அன்புடன் பகிர்வது*
🌹 *சி. மதியழகன்*
🌹 *பட்டதாரி ஆசிரியர்*
🌹 *அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி*
🌹 *வாழப்பாடி*
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘








