ஜூலை 2, வரலாற்றில் இன்று. அரசு ஊழியர்களை அடக்குமுறை செய்ய எஸ்மா சட்டத்தை பிரயோகித்த தினம் இன்று. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஜூலை 2, வரலாற்றில் இன்று. அரசு ஊழியர்களை அடக்குமுறை செய்ய எஸ்மா சட்டத்தை பிரயோகித்த தினம் இன்று.

ஜூலை 02-ம் நாள் தமிழக அரசு அலுவலர்கள் ஆசிரியர்களின் உரிமைகள் சலுகைகள் 2002 - 2003-ல் படிப்படியாக பறிக்கப்பட்டு அடக்கு முறை கட்டவிழ்க்கப்பட்டது .

இதனால் அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் அனைத்து சங்கங்களும் ஓரணியில் திரண்டு ஒன்றுபட்ட ஒட்டுமொத்த கூட்டமைப்பும் போராட்டம் (02.07.2003-ல்) நடத்தியது.

 தமிழக அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பெற்று வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு வந்தன.

பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து புதிய CPS 1.4. 2003-ல் அமல்படுத்தப்பட்டது.

 ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பாதது.

 சரண் விடுப்பு ஒப்படைப்பு ரத்து பென்சன், கமுட்டேசன் 40% என்பது 33.33% சதமாக குறைக்கப்பட்டது நாளது வரை  மாற்றப்படவில்லை. உள்ளிட்ட கோரிக்கைகள் சலுகைகள் நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நாள் : 02.07.2003.

இதன் காரணமாக போராட்டக்காரர்களை 30.06.2003 அன்றும் 01.07.2003 அன்றும் நள்ளிரவில் காவல்துறை அலுவலர்கள் ஏவல் துறையாக செயல்பட்டு அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களை வீடு வீடாக சென்று
தீவிரவாதிகளையும் கொலை / கொள்ளைக்காரர்களையும் கைது செய்வது போல் நள்ளிரவில் போராட்டக்காரர்களை கைது செய்த நாள்.

 ஒரு பாவமும் அறியாத அரசு அலுவலர்கள் / ஆசிரியர்கள் மீது பேருந்து மறித்தல், எறிக்க முயற்சி, பேருந்து நிலையங்களில் பணிக்கு வரும் பெண் அலுவலர், ஆசிரியைகளின் கையை பிடித்து இழுத்தல் , பணிக்கு செல்பவர்களை தடுத்தல் , அரசு உடமைகள் சேதப்படுத்துதல், களவாடுதல் "தகாத வார்த்தைகளால் வசைபாடுதல் " பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என எண்ணற்ற / அற்பமான / பொய்யான தகவல்களால் முதல் தகவல் அறிக்கை தயாரித்து சிறைச்சலைக்கு அனுப்பிய நாள் 2.07.2003

தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர்கள் /மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளும் நிரம்பிய நாள் 02.07.2003.

 இந்த போராட்டத்தின் காரணமாக வேலை வாய்ப்பற்ற தகுதியுள்ள இளைஞர்களுக்கு ரூ.4000/- அடிப்படையில் நியமனத்திற்காக அரசு அழைப்பு விடுத்த நாள்.

 நேர்காணல் மூலம் 15,400 க்கு மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாள் 02.07.2003.

 காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களின் வீடு வீடாக சென்று தீவிரவாதிகளைப் போல தேடித் தேடி/ஒட ஓட விரட்டிய நாள் 02.07.2003.



அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களின் ஒட்டு மொத்த குடும்பமும் | நண்பர்களும், உற்றார் உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுத நாள் O2.07.2003.

ஒரே கையைழுத்தில் 400000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை அரசுப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிடப்பட்ட நாள் O2.07.2003.

அரசியல் தலைவர்கள் / சர்வதேச நாடுகள் / உலகளாவிய அரசு /அரசியல்/தொழிற்ச் சங்கங்கள் / அமைப்புகள் வாயடைத்து என்ன செய்வதென்பதையும் அறியாமல் திகைத்து நின்ற நாள் O2.07.2003.

ஒட்டு மொத்த தொழிற் சங்க கூட்டமைப்பும் , சர்வதேச நாடுகளும் தமிழக அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களுக்காகவும் தமிழக அரசை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்பிய நாள் O2.07.2003.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் போரட்டம் நியாமானது என அவசர வழக்கில் தமிழக அரசுக்கு தெரிவித்து போராட்டர்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட அறிவுத்திய நாள் O2.07.2003.

 போராட்டம் செய்ய அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களுக்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்து தமிழக அரசு போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடுத்த நாள் O2.07.2003

முதலில் அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் சாதகமாகவும் செயல்பட்ட 'நீதி, பின்னர் அரசுக்கு சாதகமாக மாறிய / மாற்றிய நிகழ்வு நடந்த நாள் O2.07.2003.

தமிழக மத்திய சிறைகளில் கைது செய்து அடைக்கப்பட்ட அரசு அலுவலர்கள்/ ஆசிரியர்களை சிறிய அறைகளில் ஆடு மாடுகளை பட்டியில் (கூண்டில்)அடைப்பதைபோல் ஒரே அறையில் ஐந்துக்கும் மேற்பட்டோர் அடைத்தது, அறைகளில் உள்ள கழிப்பிடித்தில் தண்ணீர் வசதி வழங்காதது, மின்சாரம் துண்டித்தது ,குடி தண்ணீர் வழங்காதது , முதல் வகுப்பு தகுதி பெற்று வந்த அலுவலர்களுக்கு முதல் வகுப்பு தராமல் மறுத்தது , சுகாதாரமற்ற தரமில்லாத உணவு தயாரித்து வழங்கி கொடுமை படுத்தியது,
உடல் நலமில்லாதவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்தது. ஏற்கனவே சிறைச்சாலைகளில் தண்டனை பெற்றுள்ள குண்டாஸ் ,திருடர்கள், வழிப்பறியாளர்கள், கொலைகாரர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை மிரட்டியது என சிறைச்சலையிலும் அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களை போராட வைத்து கொடுமை படுத்தி அழகு பார்த்த தினம் O2.07.2003.

 30.6.03 நள்ளிரவு, 01 .07.03, நள்ளிரவு முதல் 03.7.2003 முடிய அனைவரையும் ESMA சட்டத்தில் கைது செய்து விட்டு பின்னர் பல்வேறு மாற்றங்களுடன் TESMA சட்டத்தில் கைது என 04.07.2003 ல் அவசர சட்டம் இயற்ற காரணமான நாள் O2.07.2003 .

கைது செய்யப்பட்ட மற்றும் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களில் 88 நபர்கள் உயிர் தியாகம் செய்து இன்னுயிர் நீத்ததற்கு காரணமான கருப்பு தினமும் இந்நாள் 02.07.2003.

போராட்டம் வெற்றி பெறும், இழந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும் என்பதை அறியாமலேயே உயிர் நீத்த தியாக சீலர்களை போற்றி பொற்பாதங்கள் தொட்டு வணங்க வேண்டிய நாளும், நினைவு கூற வேண்டிய நாளும் வீர வணக்கம் செலுத்த வேண்டிய நாளும் தான் இந்த 02.07.2003.

போராட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பல்லாயிரக் கணக்கில் கைது செய்து விட்டு பின்னர் 1000 நபர்கள் மட்டுமே கைது எனவும் பின்னர் 999 நபர்கள் என அவர்களுக்கு பிடித்த 9-ம் எண் அறிவித்துவிட்டு பின்னர் போராட்டக்காரர்களில் ஒருவரை தகுதி நீக்கம் செய்து அவர் அரசுப் பணியில் இல்லை ஓய்வு பெற்றவர் என தெரிவித்த அவலமும் போராட்ட களத்திற்கு மருத்துவ விடுப்பு மற்றும் பிற விடுப்பு களும் எடுத்து வந்த அங்கீகாரமில்லாத / அரசியல் சார்புடைய சங்கத் தலைவர்களின் முகத்திரை கிழிந்த நாளும் O2.07.2003.

பல்வேறு தொழிற்சங்கங்கள் / கூட்டமைப்புகள், சர்வதேச அமைப்புகள் கம்யூனிசக் கொள்கைகள் ஏற்றுக் கொண்டுள்ள /ஏற்றுக் கொள்ளாத நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்ட நிலையிலான நேசக்கரம் / மற்றும் இயன்ற உதவிகள் செய்து தமது வலிமையையும், ஒற்றுமையையும் சர்வதேச / ஐக்கிய நாடுகள் சபைக்கும் உணர்த்திட காரணமான தினம் O2.07.2003.

ஹிட்லரைப் போல் ஒரு சர்வாதிகாரி நாட்டை ஆண்டால் எப்படியெல்லாம் செய்யலாம் என பாடம் சொன்ன நாள் O2.07.2003

 02.07.2003-ல் நடந்த / நடத்திய கொடுமைகளுக்கு எல்லாம் என்ன தீர்வு என அரசு அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள் தொழிற்சங்க அமைப்புகள் இவர்களை ஒத்த குடும்பத்தினர் , உற்றார் உறவினர்கள் நண்பர்கள், பொதுமக்களும் சேர்ந்து 2004 மே திங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 39+1 என்ற அனைத்து தொகுதியிலும் புரட்டிப் போட்ட தோல்வியும் / வெற்றியும் என அரசியல் தலைகளை சிந்திக்க வைத்த நாளும் இதே தினம் தான்.

 பின்னர் வந்த சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சி மாற்றம் காட்சி மாற்றம் செய்தது. புதியதாக வந்த அரசு மீண்டும் அனைத்து சலுகைகளையும் வாரி வழங்கியது, மேலும் போராட்ட காலம், சிறைக்காலம், தண்டனை காலம் , பணி நீக்ககாலம் என அனைத்து தண்டனைகளையும் தளர்த்தி வந்து இறுதியில் ரத்தும் செய்து அனைத்து காலத்திற்கும் சம்பளம் மற்றும் படிகள் வழங்கி (பணிக் காலம் என அறிவித்து ) அந்த காலத்தை அகராதியின் அடிச்சுவடே காணாமல் போக வைத்த நினைவுகளுக்கு எல்லாம் காரணமான நாள் O2.07.2003.

இப்படி முன்னோர் போராடி பெற்ற பலன்களை நீங்கள் இழக்கப்போகிறீர்களா?

சிந்திப்பீர். செயல்படுவீர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H