எந்திரன் 2.0 உண்மையாகிறது: மனிதர்களை தாக்க தொடங்கியுள்ள பறவைகள் நிஜ சம்பவம்...
பறவைகள் கூடு கட்டும் இடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதாலும், பொதுவாக
அவர்கள் மொபைல் தொலைபேசிகளை பேசும் போதும் , பறவைகள் மனிதர்களை தாக்கும்
சம்பவம் அமெரிக்காவில் சாதாரணமாகிவிட்டதாக கானுயிர் வல்லுநர்கள்
எச்சரித்துள்ளனர்.
டென்வர் நகரின் மத்திய பகுதியில் உள்ள ஏரியில் தன் நாயை நடைப்பயிற்சிக்கு
மேரி என்ற பெண் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பறவை தாழ்வாக
பறந்தது. அவர் என்னவென்று சுதாரிப்பதற்குள்ளேயே, பறவை மேரியின் தலையில்
தாக்கிவிட்டு, புதருக்குள் சென்றுவிட்டது. அவ்வேளையில் அவர் மொபைல்போனை
பாவித்துக்கொண்டு இருந்துள்ளார். இதேவேளை, பறவைகள் பாதுகாப்பு அமைப்பான
தேசிய ஆடுபம் அமைப்பின் கலிஃப்போர்னியா பிரிவு இயக்குநர் ஆண்ட்ரியா ஜோன்ஸ்,
இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறுகிறார்.








