இன்றைய நிகழ்வில் அரசு உயர்நிலைப்பள்ளியில் முதன் முதலாக சர்வதேச தரச்சான்று பெற்ற பள்ளி என்னும் பள்ளியாக அறிவிக்கப்பட்டதற்கான சான்றிதழையும் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி தலைமைஆசிரியர் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் வழங்கிப் பாராட்டினார்.பெற்றோர்கள் பள்ளியின் தேவை அறிந்து இக்கல்வியாண்டில் வளாக கண்காணிப்பு கேமரா , பொது ஒலிப்பரப்பி அமைப்பு(ஸ்பீக்கர்), கணினி மேஜை, ஸ்மார்ட் போர்ட், புரொஜெக்டர், மின்விசிறி, சுவர் கடிகாரம், பிரிண்ட்ர், புளு டூத் ஸ்பீக்கர், சுழல்நாற்காலி, வகுப்பறை மேஜை, வகுப்பறை தடுப்பு, தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை போன்ற சுமார் 7.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கல்விச்சீராக வழங்கினார்கள்.
அப்பொருட்களை பெற்றோர்கள் தாலுகா அலுவலகம் அருகில் இருந்து பள்ளி வரை, மேள தாளங்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர். காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிலம்பம், யோகா மற்றும் சதுரங்கம் ஆகிய செயல்பாடுகளில் கின்னஸ் புக் ஆப் ரெகார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெகார்ட்ஸ் போன்ற சாதனைகளை படைத்த சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ரோட்டேரியன் பிரான்சிஸ் சேவியர் நன்றி கூறினார். நிக்ழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை உதவி தலைமையாசிரியர்கள் உமா, விஜய லட்சுமி மற்றும் முத்துவேல்ராஜன் ஆகியோர் செய்திருந்தார்கள். பட்டதாரி ஆசிரியர்கள் விஜயகாந்தி மற்றும் மீனாட்சி அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.









