மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் வருமான வரி விலக்கு உச்ச வரம்புக்குள்
வருவாய் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டாம் என்பது அனைவரும் அறிந்ததே.
அவர்கள் மட்டும் அல்லாமல், மேலும் சிலரும் வருமான வரி செலுத்துவதில்
இருந்து விலக்கு பெறுவார்கள். 60 வயதுக்குள் இருக்கும் தனிநபர், ஆண்டுக்கு
ரூ.2.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டினால் அவர்கள் வரி செலுத்த
வேண்டியதில்லை.
அதாவது, 60 வயதுக்குள் இருக்கும் தனிநபர், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டினால் அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சபட்ச தொகை ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருவர் ரூ.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டினால், அவர் நிச்சயம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதே சமயம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து, அவர் தனது ஊதியத்துக்கு செலுத்திய வரியை முழுவதுமாக திரும்பப் பெற முடியும். ரூ.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டுவோர் நிச்சயம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்! வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய 2019 ஜூலை 31ம் தேதியே கடைசி நாளாகும். அவ்வாறு ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் செலுத்தி விட வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செலுத்தவில்லை என்றால் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்றும் எச்சரித்துள்ளது. ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்குள் உள்ளவர்கள் வருமான வரிக் கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்து விட வேண்டும். ஒரு வேளை ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.