நல்லநேரம்உண்மையா? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


நல்லநேரம்உண்மையா?

இந்தியாவில  தொழில் பண்றதா இருந்தாலும்....கல்யாணம் பண்றதா இருந்தாலும்,எது பண்றதா இருந்தாலும் நேரம்னு ஒன்னு பாக்காமா பண்ண மாட்டோம்‌.....

இந்த மணி பாக்குறோமே இந்த மணி சரியான மணியா இல்ல நாம குத்துமதிப்பான மணியதான் பாக்குறோமானு அறிவியல் படி ஆதாரமாகவே  தெரிந்து கொள்ளதான் பதிவு...

1.ஒரு வருசத்துக்கு 365நாள்னு எல்லாரும் சொல்லுவோம்..ஆனா அது சரியான கணக்கு இல்ல...

365 நாள்+கால் நாள் ஒரு  வருசத்துக்கு...இந்த கால் நாள் இருக்குல இதை தான் நாம 4வருசத்துக்கு ஒருக்கா இதுல சேர்த்துட்டு  ஒரு நாளா கண்ககு வச்சுட்டு...லீப் வருசமா 366நாள்னு   கணக்கீடுக்காக வைக்குறோம்..

சோ இதுலையே 6மணிநேரம் வருசத்துக்கு மிஸ் ஆகுது...இதுவும்
ஒரிசினலா நேரம் இல்ல..

2.ஒரு நாளைக்கு 24மணிநேரம்னு நாம ஒரு ரவுண்டா வேணும்றதுக்காக வைத்து இருக்கோம் ஆனா ஒரு நாளைக்கு 23மணிநேரம் 56நிமிடம் 4 வினாடி தான்..

சோ இதுலையும் ஒரு 4நிமிடம் தினமும் குறையுது...

இதுவும் ஒரிசினல் இல்ல..

3...உலகம் முழுவதும் ஒரே மாதிரி நேரம் வேணும்னு தாலமி அப்டிறவரு பூமிய சுத்தி அட்சக்கோடு தீர்க்கக்கோடுனு கற்பனையா வரைஞ்சாரு...

அந்த கோடுகளை வரைஞ்ச பிறகு  உலகத்துல எந்த பகுதில இருந்து நேரத்தை கணக்கிடுறதுனு விஞ்ஞானிகள்ட சண்டை வர...இறுதியா...பழமையான ஆராய்ச்சி மையம்  பூமிக்கு நடுமையத்துலையும் இருக்க இங்கிலாந்துல இருக்கும் கிரீன்விச்ல இருந்து ஆரம்பிக்கலாம் அந்த இடத்துல என்ன மணி இருக்கோ அதை வச்சு...உலகம் முழுக்க கணக்கு பண்ணிக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்தாங்க..

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நேரம் வித்தியாசமே 5 1/2 மணிநேரம் வித்தியாசம்..

சோ இதுலையும் சரியான நேரம் இல்ல...

4.சரி அதுவும் வேணாம் விடுங்க....இந்தியாவுல நாம பாக்குற நேரம் தான் சரியான நேரமானு பாத்தா  அதுவும் இல்ல....ஏன்  அப்டினா

இந்தியால மேற்கில் மும்பையில இருந்து கிழக்கில் அருணாச்சல பிரதேசம் வரை உள்ள தூரம் 2933கிமீ ....அதனால தினமும் 2 1/2 மணிநேரத்துக்கு முன்னாடியே‌.... அருணாசல பிரதேசத்துல சூரியன் உதிச்சுரும்...

நமக்கு அப்பதான் 5மணி ஆகிட்டு இருக்கும்...விடிஞ்சுருக்காது நமக்கு...

ஆனா அங்க 7.30 மணி ஆகிருக்கும்..

ஒரு நாட்டுக்குள்ளையே....ஒவ்வொரு மாதிரி நேரம் இருந்தா நாட்டை எப்டி‌..முறைப்படுத்த முடியும்.. அரசு பணியாளர்களை  வேலைக்கு  எந்த நேரத்துல அனுப்புறதுனும் இந்திய அரசுக்கு குழப்பம் வந்துருச்சு...

அப்போ தான் தாலமி வரைஞ்ச கோட்டை வச்சு‌...இந்தியாவுல நடு இடத்துல இருக்க அதாவது 2933 கிமீட்டரை பாதியா பிரிச்சு அது எந்த இடத்துல இருக்குனு பாத்தாங்கா...😂😂😂அதுதான்...

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் ஊர்... அதனால அந்த இடத்துல என்ன நேரம் இருக்கோ அதே நேரத்தை இந்தியா முழுக்க பயன்படுத்திக்லாம்...... அதுதான் சரியான தீர்வா இருக்கும்னு அரசு முடிவுக்கு வந்தாங்க.....

அன்றில்  இருந்து அலகாபாத்ல இருக்க நேரம்தான் இந்தியாவோட பொதுவான நேரமா மாறிருச்சு...

சொல்லப்போனா நாம இப்ப பாக்குற நேரம் நம்ம தமிழ்நாட்டுல நம்ம ஊர்ல  உள்ள நேரம் இல்ல....உத்திர பிரதேசத்துல அலகாபாத்ல இருக்க நேரம்..... இதே தான் எல்லா மாநிலத்துக்கும் இப்ப இருக்கு...

இதே நிலைமைதான் நம்மை மாதிரி பெரிய நாடு ரஷ்யாவுக்கும்....

அவன் என்ன பண்ணிட்டான் சொந்த நாட்டுக்குள்ளையே‌....மணியை ஏழு வகையா பிரிச்சு பயன்படுத்திட்டு இருக்கான்‌...ஒவ்வொரு மாநிலத்துக்கு போனாலும் ரஷ்யால வேற வேற நேரம்தான் இருக்கும்....

இப்டிதான் நாம பாக்குற நேரம்‌.....

அதாவது மிகத்துல்லியமான நேரம்னு  இந்தியாவுலையோ உலகத்துலையோ....எங்கையும் இல்ல....

இதுல குழந்தை பிறந்த நேரத்தை வச்சு ஜாதகம் எழுதுரீங்க.. எதிர்காலத்தை கணிக்குறீங்களே.....இது நம்மை நாமே முட்டாளா ஆக்கிக்குற விசயம் இல்லையா‌..

அப்டி இருக்குறப்ப....நல்ல நேரம் 10நிமிசத்துல முடிஞ்சுருச்சுனு பொண்ணுவீடு மாப்ள வீடு சண்டை போட்டு கல்யாணத்தை நிப்பாட்டுறது...

நல்ல நேரம் முடிஞ்சுருச்சுனு இன்னைக்கு துவங்க இருந்த தொழில 2மாசம் தள்ளிப்போட்டு தொழிலுக்கு வாங்குன கடனுக்கு சும்மாவே வட்டி கட்டுறது....

அடுத்த வருசம்தான் எனக்கு நாள் நல்லா இருக்கும்னு.....1வருசம் வேலைக்கு போகாமா இருக்குறது...40வயசுலதான் கல்யாண கலை இருக்குனு நாமே நம்மோட இளமைய தொலைச்சுட்டு....வாழ்க்கைய இழக்குறதுனு‌...

நம்மோட வாழ்க்கையோட முன்னேற்றத்துக்கு நாமே முட்டுக்கட்டை போட்டுட்டு இருக்கோம்...

இது எல்லாருக்குமான பதிவுதான்....

இறைநம்பிக்கை வேற மூடநம்பிக்கைவேற..... எப்டி உடன்கட்டை ஏறுதல்....பெண்குழந்தைக்கு கள்ளிப்பால் ஊத்திக்கொள்றதுலாம் மூட
நம்பிக்கைனு நாம தெரிஞ்சுட்டு அதை ஒதுக்கி வச்சமோ‌‌..அதே மூட நம்பிக்கைகள் தான் இந்த  நல்ல நேரம், ராகுகாலம்,ஜாதகம்லாம்....

தயவு செஞ்சு மீண்டு வாங்க மூட நம்பிக்கைகளில் இருந்தாவது...

வாழ்க்கையல நீங்க நினைக்குற எந்த காரியத்துக்கும் நேரத்தை காரணமா வச்சு....தள்ளி போட்டுராதீங்க....அந்த நேர தாமதமே....நீங்க போக போக வேண்டிய உயர்ந்த இடத்துல இன்னொருத்தரை அமர வைத்து விடும்.....

தொழிலாக இருந்தாலும் அதே தான்...

மணி என்பது நாம நேரத்தை சிக்கனமாக பயன்படுத்த நம்முடைய பணிகளை சரியாக திட்டமிட்டு...செயல்படுத்த மட்டுமே தவிர மற்றபடி....நல்லநேரம் கெட்ட நேரம்லாம் இல்ல...

                       .......  நன்றி.....

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H