பெரியாரைப் பற்றி பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கருத்து: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பெரியாரைப் பற்றி பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கருத்து:

பெரியாரைப் பற்றி பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கருத்து

கேள்வி : தந்தை பெரியாரின் கருத்துகள் இந்த இனத்திற்கு எந்த அளவிற்குத் தேவை என்று கருதுகின்றீர்கள்?

தமிழ் தேசிய முன்னோடி அய்யா பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பதில்  :-

ஐயா! இது ஒரு அருமையான கேள்வி!

ஆனால் நான் ஒன்றை உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்...
தந்தை பெரியாரைப் பற்றி நான் நினைக்கின்றபோது அவருடைய கருத்துகளும் அவருடைய ஓயாத உழைப்பும், அவருடைய முழுவாழ்க்கைத் தொண்டும் என்கின்ற நிலைகளை நாம் பார்த்து வியப்பதற்கும் அவற்றைப் பற்றி அறிவதற்கும் தான் நமக்கு ஓர் உணர்வு தேவையே தவிர,

எவ்வளவு தேவை எவ்வளவு தேவையில்லை என்பதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும் படியான அந்த உணர்வுகள் நமக்குத் தேவையில்லை.

ஏனென்று சொன்னால் நமக்கு இப்படிப்பட்ட ஒரு சிந்தனையை உருவாக்கிக் கொடுத்தவரே அவர்தாம்!

நாம் வேண்டிக்கொண்டு அவர் செய்யவில்லை....

நாம் ஆராய்ந்து இது தேவை என்று அவரை நாம் கேட்டுக் கொண்டு அவர் அதைத் தொடங்கவில்லை.

இந்த இனத்தைப் பற்றி நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னாலே முழுமையாக உணர்ந்து கொண்ட ஒரே ஓர் அறிஞரும் தலைவரும் கருத்துப்பேராசிரியரும் அவரே!

உண்மையில் இதற்கு முன்னே இருந்த அறிஞர்களை விட,
அவர்கள் தந்த கருத்துகளை விட... மக்கள் நலன் கருதுகின்ற கருத்துகள் இந்த நாட்டிலே பெரியார் அவர்களால்தான் தரப் பெற்றன என்று சொன்னால் யாருக்கும் அதைப் பற்றிய ஐயுறவு தேவையில்லை.

ஒரு நீண்ட நெடுங்கால இருள் விலகத் தமிழகத்தின் விடிவெள்ளியாகத் தோன்றுகின்ற ஒரு கதிரவன் போல் ஒரு பகலவன் போல் அவர் இருந்தார்.

பெரியாரின் தொண்டு இந்த உலகத்திற்குக் கிடைக்காமல் போயிருந்தால் இந்த இனம் இன்னும் ஒரு 500,1000 ஆண்டுக்காலத்திலேயே படிப்படியாகத் தேய்ந்து போய் பழைய கிரேக்க இனம் போல் இந்த உலகத்தை விட்டே அழிந்து போயிருக்கும்....

 அதை நான் துணிந்து சொல்வேன்...

 ஏனென்று சொன்னால்

மொழி வழியிலே, இன வழியிலே, இலக்கியங்கள் வழியிலே, கலை வழியிலே, ஆட்சி அரசாளுமை வழியிலே ஆகிய எல்லாவற்றிலும் ஆரிய இனம் நாட்டைக் கவ்வியிருந்தது.

அந்த உண்மைகள் யாராலும் உணரப் பெறாமலிருந்தன.

தொடக்கக் காலத்திலே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் காலத்திலே ஆரியம் இந்த நாட்டைக் கவ்வுகின்ற நிலையை -அதுபற்றிய எச்சரிக்கைக் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து எந்தப் புலவரோ, எந்த அறிஞரோ, அல்லது எந்த ஓர் அரசரோ, இனத்துக்கான வளர்ச்சிக்கான உண்மையான மீட்சிக்காக  -அறிவு முன்னேறத்திற்காக எந்தக் கருத்தையும் நூல் வடிவாகவோ அல்லது வேறு வகையான தொண்டு வடிவாகவோ சொன்னது போல் நான் படித்ததில்லை.

அதாவது, கிறித்து பிறந்து 200 ஆண்டுகளுக்குப் பின்னாலே இருந்து வருகிற சிலப்பதிகாரம், மணிமேகலை அல்லது தொடக்கக் கால நூல்கள், பாவியங்கள், கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்கள் மற்ற ஏராளமான சிற்றிலக்கியங்கள் பேரிலக்கியங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அலசிப் பார்த்தாலும்கூட எல்லாம் ஆரியச் சார்பான கருத்துகளைத்தாம் வெளியிட்டிருக்கின்றன.

எங்காவது தமிழ் மொழியைப் பற்றியோ, தமிழ் இனத்தைப் பற்றியோ உணர்ந்து கொண்டது போல் ஓர் இடத்திலும் கிடையாது.

இலக்கியம் என்று சொன்னாலே அஃது் ஆரியக் கருத்துத்தான்.

கதைகள் என்று சொன்னாலும் அவை ஆரியக் கருத்துகள்தாம்.

மக்கள் நலம் கருதுகிற கருத்தை வெளிப்படுத்திய ஓர் ஆசிரியனையும் பார்க்க முடியாது.

அவ்வளவு பெரிய நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னாலே உண்மையாகவே மக்களைப் பற்றிக் கவலைப்படுகின்ற தொண்டு என்று சொன்னால் அது பெரியார் ஒருவர் தொண்டுதான்.

முன்புகூடப் புலவர்கள் வேண்டுமானால் நிறையப் பேர் இருந்திருக்கின்றார்கள். இலக்கியங்கள் பண்ணி இருக்கிறார்கள்...

அந்த இலக்கியங்கள் தமிழனுடைய தன்மான உணர்வைச் சிந்திக்கச் செய்ய முடியாதபடி செய்துவிட்டன என்று சொன்னால், அஃது உண்மையாகவே பொய்யாகாது.

ஆரியர்கள் அந்த இலக்கியக் கதைகளிலேதாம் தமிழர்களைச் சிந்தனையற்றவர்களாக மாற்றி விட்டார்கள்....

நீண்ட நெடுங்காலமாக இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், புளுகுக் கதைகள் தமிழர்களின் சிந்தனை வழிகளின் ஊற்றுகளையே அடைத்துவிட்டன.

அவர்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சியே கிடைக்காமல் போய்விட்டன.

அவர்களுக்கு நாமெல்லாம் ஒரே இனம் என்கின்ற உணர்ச்சி கூட இல்லாமல் போய்விட்டது...

எல்லாம் அடிமைகள், அதாவது பிராமணர்களுக்காகவே உழைக்கப் பிறந்தவர்கள் என்கிற நிலைதான் இருந்தது.

சேர, சோழ, பாண்டியர்கள் என்று பெருமையாக நம்முடைய முன்னோர்களை எதற்கு நாம் பெருமையாகக் கருதினோம் என்று சொன்னால், அந்தணர்களுக்கு அவர்கள் பெரிய அடிமைகளாக இருந்தார்கள்.

அந்தப் பார்ப்பன அடிமைகளாக இருந்த அவர்கள்தாம், மக்களுடைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் தடையாக இருந்தார்கள். எந்த அரசனை எடுத்துக் கொண்டாலும் கோயில்கள் கட்டினான்... குளங்கள் வெட்டினான்... அறச் சாலைகள், தருமச் சாலைகள் வைத்தான்.

பெரிய பெரிய அறங்களைச் செய்தான். வேள்வி(யாகங்)களைச் செய்தான்... பார்ப்பனர்களுக்குப் பார்ப்பனர் சேரிகளை அமைத்துக் கொடுத்தான் என்றுதான் இருக்குமே தவிர, மக்களுக்குக் கல்விச் சாலைகளைக் கட்டினான் என்று இருக்காது...

மக்கள் அறிவு வளர்ச்சிக்காகப் பெரிய மன்றங்களை அமைத்தான் என்று இருக்காது. அறிவு வளர்ச்சிக்காக நம்முடைய அரசர்கள் செய்த முயற்சி எந்த ஒரு வரலாற்றிலேயும் குறிப்பிடப்படவில்லை..

மீள்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H