Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரசுப்பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்ட என்னுடைய Lkg, Ukg வகுப்பறை....
வகுப்பறை இல்லாமல் 2வாரம் திண்டாடினோம். எப்படியோ போராடி பஞ்சாயத்து அலுவலகத்தில் கடன்பெற்றுவிட்டோம்.
மழலையர் வகுப்புகளுக்கு பாடம் கற்பிப்பதை நாங்கள் ஒரு போதும் கீழாக கருதவில்லை நீதிபதி அவர்களே...
அடிப்படை வசதிகள் இல்லாமல், முன்னேற்பாடுகள் செய்யப்படாமல் , ஏற்கனவே தொடக்கப்பள்ளியில் வகுப்புக்கொரு ஆசிரியர் இல்லாமல் திண்டாடும் நிலையில், மழலையர் கல்வி போதிக்க படித்த இளைஞர்கள் இருக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், ஆசிரியர் உபரி என்று கூறி எங்களை பதவியிறக்கம் செய்ததையே நாங்கள் எதிர்க்கிறோம்.
தனியார் பள்ளியில் ஒவ்வொரு பாடவேளைக்கும் ஒரு ஆசிரியர் இருக்க, ஆனால் அரசுப்பள்ளியோ பலவகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் கற்பிப்பது முறைதானா நீதிபதிகளே?
அடித்தளமே சரியில்லை என்கிற போது, தனியார் பள்ளியையும் அரசுப்பள்ளியையும் ஒப்பிட்டு அரசுப்பள்ளி ஆசிரியர்களை மட்டம் தட்டுவது எப்படிபட்ட மனோபாவம் நீதிபதி அவர்களே?
அரசுப்பள்ளிகளில் பாடம் போதிப்பதைவிட முக்கியமானது உயிரற்ற காகிதங்களை நிரப்பி பல பதிவேடுகளை பராமரிப்பது...
பல அரசுப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களே இல்லை. ஆனால் நாடு முழுவதும் தூய்மைபாரதம் விழா கொண்டாடப்படுகிறது. பணியேற்ற நாள் முதல் என் வகுப்பறைக்கு நானே துப்புரவு பணியாளர்.
ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலித்துவிட்டால் போதும் நீதிபதியான தங்களுக்கும்,சமூகத்திற்கும் சம்பளம் அதிகம் என்றே காதில் கேட்கிறது...
எந்த தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர் 1,2,3 (சில பள்ளிகளில் 5 வகுப்புகளும்) என்று மூன்று வகுப்பு மாணவர்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து நாள் முழுக்க பாடம் போதிக்கிறார்?
எந்ந தனியார் பள்ளியில் ஆசிரியர் வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்கிறார்?
தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணியிடம் உள்ளதா? இல்லவே இல்லை. அந்த அலுவலக பணிகளை செய்பவர்கள் இந்த ஆசிரியர்களே. தனியார் பள்ளியில் இந்த நிலை உள்ளதா?
தனியார் பள்ளியில் இரவு காவலர்கள் உண்டு. அரசுப்பள்ளியில்? இரவில் அங்கே நடக்கும் செயல்களுக்கு பகலில் மூக்கையும் கண்ணையும் மூடிக் கொண்டு ஆசிரியர்கள் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கும் மேல் நாசம் செய்யப்படும் பள்ளியின் தளவாடங்களை என்ன செய்வது, அதற்கும் ஆசிரியர்கள்தான் பொறுப்பு. காலையில் பள்ளியில் நுழைந்தவுடன் மாணவர்களின் சத்தம் சார்...கழிவறையில் குழாயை உடைச்சிட்டாங்க தண்ணீ போகுது, பூட்டு திறக்க முடியாம சாவி துவாரத்துல ஏதோ வச்சி அடைச்சிருக்காங்க, தண்ணீர் தொட்டியை உடைச்சிட்டாங்க... கழிவறை சன்னல் உடைந்திருக்கு, சார் இன்னைக்கு குமாரு பள்ளிக்கு வரலை வீட்ல விளையாடுறான் வாங்க போய் கூப்டு வரலாம்? சார் இவன் இன்னைக்கு சாப்பிடாமலே வந்துட்டான் சார்... இப்படி பல குரல்கள்....
இங்கே உள்ள குழந்தைகள் வயிறு முட்ட உண்டுவிட்டு, தாய் தந்தையின் முழு அரவணைப்பில் வளரும் பிள்ளைகள் அல்ல. வீட்டிற்கு சென்ற உடன் கவனிக்கவும்,பள்ளியில் நடத்திய பாடங்களை சொல்லித்தரவும் இவர்களின் பெற்றோர்கக்கு நேரமும் இல்லை. பலருக்கு பொறுப்பான பெற்றோரும் இல்லை.
பாடம் போதிப்பதில் எந்த பணியை செய்தாலும் அதை அப்படியே பதிவேடுகளில் பதிவு செய்து,அதிகாரிகள் வரும் போது காண்பிக்க வேண்டும்...
வருடம் முழுக்க தேர்தல் பணி செய்ய வேண்டும்... அரசின் இலவசங்களை நெடுந்தூரம் பயணம் செய்து சுமை தூக்கியாக மாணவர்களிடம் சேர்க்கும் பணி செய்ய வேண்டும்.
மாணவர்களின் தகவல்களை இணையதளத்தில் ஏற்றும் பணியையும் இரவு பகலாக செய்யும் கணினி பணியாளராகவும் அரசுப்பள்ளி ஆசிரியர் செயல்பட வேண்டும்.
இப்படியான பல இடையூறுகளுக்கு மத்தியில் அரசுப்பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்களை நீதிபதிகளும், சமுதாயமும் வார்த்தைகளால் எட்டி உதைப்பது அவர்களுக்கு அப்படி ஒரு பேரானந்தம்...
ஆயிரம் வீண் வசனங்கள் எங்களின் மேல் வீசப்பட்டாலும், எங்களின் கல்விப்பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்....
Rajakumari Senthil
நன்றி ஆசிரியர் குரல் முகநூலில் இருந்து
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








