காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 01-08-2019 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 01-08-2019




இன்றைய திருக்குறள்

*குறள்-101*

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
 வானகமும் ஆற்றல் அரிது.

*மு.வ உரை:*

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

*கருணாநிதி  உரை:*

வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

*சாலமன் பாப்பையா உரை:*

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

ஆசைகள் சிறகு ஆகலாம். அதற்காக கால்களை இழந்து விட்டு  பறந்தால் பிறகு பூமிக்கு திரும்ப முடியாது.
- கலைஞர் கருணாநிதி

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி*

சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்.

Practice makes perfect.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important  Used Words*

 Historian வரலாற்று ஆய்வாளர்

 Housewife குடும்பத் தலைவி

 Hunter வேடன்

 Inspector
 ஆய்வாளர்

 Instructor பயிற்றுனர்

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1.தமிழ்மறை என்று அழைக்கப்படும் நூல் எது?

*திருக்குறள்*

2. இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது?

*போபால்*

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Common grammar mistakes*

Wrong : I live in United States.
Right : I live in the United States.

Wrong : When I will arrive, I will call you.
Right : When I arrive, I will call you.

Wrong : I’ve been here since three months.
Right : I’ve been here for three months.

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

அணி பலவகைப்படும். அவற்றுள் சில,

தன்மையணி

உவமையணி

உருவக அணி

பின்வருநிலையணி

தற்குறிப்பேற்ற அணி

வஞ்சப் புகழ்ச்சியணி

வேற்றுமை அணி

இல்பொருள்
 உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி

இரட்டுறமொழிதலணி.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*பழமொழிக் கதை*

*ஆறிலும் சாவு நூறிலும் சாவு*

 குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளையான கர்ணனை காணச் சென்ற குந்திதேவி அவனிடம் பாண்டவர்களின் ஐவருடன் நீ சேர்ந்து கொண்டு கவுரவர்களை எதிர்த்து போரிடு என்றாள். அதற்கு கர்ணன் மறுத்து பேசுகின்றான்.

 அவன் தனது தாய்யிடம் நான் பாண்டவர்களில் ஆறாவதாக இருந்து போரிட்டாலும் சரி கவுரவர்களுடன் சேர்ந்து நூறு பேர்களுடன் போரிட்டாலும் சரி நான் இறப்பது உறுதி என்று எனக்குத் தெரியும். அதனால் தாயே உயிருள்ள அனைத்து பிறப்புகளுக்கும் ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான் என்றான்.

 செஞ்சோற்றுக் கடன் தீர்க்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனிடமே இருந்து என் உயிரை விடுகிறேன் என்றான். இதற்கு தான் அன்றே கர்ணன் இப்பழமொழிகளைக் கூறினான்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு..: தமிழக அரசு அரசாணை வெளியீடு.

🔮 ரூ.269 கோடியில் கட்டப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

🔮ஜம்முவில் மழையால் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்.

🔮அத்திவரதர் சயனகோல தரிசனம் நிறைவு: நாளை முதல் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

🔮மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

🔮ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளாம் -ஆவின் நிறுனம் அறிவிப்பு.

🔮டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் தூத்துக்குடியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி 3-வது வெற்றி.

🔮Cabinet approves increasing strength of Supreme Court judges from 31 to 34.

🔮Bengaluru International Airport set to become wedding destination, to host concerts.

🔮526 teeth removed from Chennai boy’s mouth .

🔮MS Dhoni joins Army troops in militancy-infested south Kashm ..

🔮Jofra Archer’s ‘freakish prediction’ about Prithvi Shaw comes to light after 4 years.

♻♻♻♻♻♻♻♻

*தொகுப்பு*

T. தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
9600423857
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H