இந்த தேர்வில் கடலூர் மாவட்டம் சி.அரசூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அரியலூர் எஸ்பி சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வு எழுதி முடித்தவுடன் ரகுபதியை பிடித்து விசாரித்ததில்.
கன்னியாகுமரி மாவட்டம் அரக்கன்கோட்டை விலை கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரின் சகோதரர் தேவபிரகாசிற்காக தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ரகுபதி மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் தேவபிரகாஷ் ஆகியோரை கைது செய்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
1.5 லட்சம் பேரத்தில் நடைபெற்றது இந்த ஆள்மாறாட்டம்








