மனிதர்களின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் குறிப்பிட்ட மரபணுக்களை தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.
இந்த குறிப்பிட்ட மரபணுக்கள் கொண்டவர்கள் தொடர் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
The Lancet Respiratory Medicine என்கிற மருத்துவ சஞ்சிகையில் தங்களின் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருக்கும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், தமது இந்த கண்டுபிடிப்பின் விளைவாக ஒரு சிலர் வாழ்நாள் முழுவதும் புகைபிடித்தாலும் அவர்களின் நுரையீரல் தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்கிற கேள்விக்கான விடையையும் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாழ்க்கையில் புகைப்பிடிக்கும் பழக்கமே இல்லாதவர்கள் கடுமையான நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுவது ஏன் என்பதற்கான விடையையும் தமது இந்த ஆய்வின் முடிவுகள் வழங்குவதாகவும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
சுமார் 50,000 பேரிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை இவர்கள் ஆராய்ந்தனர். அந்த தரவுகளிலிருந்து பெறப்பட்ட இரண்டு கோடியே எண்பது லட்சம் மரபணு மாற்றங்களையும் இவர்கள் ஒப்பீடு செய்தனர்.
-Darwin Science Club
Konganapuram
Salem