இன்றைய ஆசிரியரின் உள்ளக்குமுறல்.... |தெரிந்துகொள்ளுங்கள் என் தமிழ் சமூகமே -ஆசிரியர்களை ஒருபோதும் குறை கூறாதீர்கள் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இன்றைய ஆசிரியரின் உள்ளக்குமுறல்.... |தெரிந்துகொள்ளுங்கள் என் தமிழ் சமூகமே -ஆசிரியர்களை ஒருபோதும் குறை கூறாதீர்கள் :

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ! அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ! மாவீரம் போகுதென்று விதை கொண்டோட! வழியிலே  கடன்காரன் மறித்துக்கொள்ள! கோவேந்தோ உழுதுண்ட கடமை கேட்க! குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க! பாவாணர் கவிபாடி பரிசில் கேட்க! பாவிமகன் படுந்துயரம் பார்க்கொண்ணாதே!......இது அந்த காலத்து பாவிமகன் பட்ட துயர்....  இக்கால ஆசிரிய பாவிகளின் துயரம்
இதோ.......                             மே மாதம் லீவு முடிந்து பள்ளி திறக்க! மாணவணை சேர்க்க ஆசிரியரும் ஆர்வமாய் காத்திருக்க! Metric பள்ளிகளோ முன்னரே மாணவணை அள்ளி சென்று விட! மிச்சமிந்த மாணவணை அரசாங்கம் RTE ல் அனுப்பி விட!                      தூண்டிலில் சிக்காத மாணவணோ பள்ளியில் சேர! சேர்க்கை ஏன் குறைந்த தென்று அரசு கேட்க!         முதல் நாளே புத்தகத்தை கொடுத்து விட வேண்டும் என்று அரசு சொல்ல! வந்திருந்த பாதி புத்தகத்தை கொடுத்து விட!  வராத புத்தகத்திற்கோ print out  எடுத்து பாடம் நடத்த! மீதமுள்ள நோட்டுப்புத்தகம் சொச்சம் வந்ததென்று msg வர!  அதை எடுக்க ஓடி செல்ல! மறுநாளே school bag msg வர! அதை எடுத்து ஓடி வர!   Laptop ம் வந்ததென்று brt  ஓலை விட! ஜூன் மாதம் ஜூட் விட்டு ஓடி விட!! 
  ஜூலைதான் team visit என்ற தீ ஜூவாலையோடு எரிந்து வர!           Informationல் தினந்தோறும் check listம் வர! Attendance வட்டமடித்து உலகைச்சுற்ற! Emis முடிக்க வில்லை என்று listம் வர!   நடுவிலே ஊசி போட நர்ஸ் வர!  ஊசி போட்ட குழந்தைக்கு காய்ச்சல் வர! அவனுக்கோ மாத்திரை கொடுத்து படுக்க வைக்க!  சத்துணவு msg வரவில்லையென்று போனும் வர!                       Brtயோ listடோடு ஓடி வர! மளிகைச்சாமான் list போல வாசிக்க! அதைக்கேட்டு என் நெஞ்சு துயரம் கொள்ள! காலநிலை அட்டவணை  போட வேண்டுமென்றார்! ஆரோக்கிய சக்கரமும் சுழற்றிட வேண்டுமென்றார்! Group cardம் செய்திட வேண்டுமென்றார்! கம்பிப்பந்தலிலே படமும்தான் தொங்கிட வேண்டுமென்றார்! கீழ்மட்ட கரும்பலகையில் எழுதியிருக்க வேண்டும் என்றார்! அதையும்தான் ஆசிரியர் திருத்தி யிருக்க வேண்டும் என்றார்!    புத்தகப்பூங்கொத்துப் பதிவேடும் வேண்டும் என்றார்! CD DVD பதிவேடும் பேண வேண்டும் என்றார்!  Slow learner பதிவேடும் போட வேண்டும் என்றார்! Mind mapம் மாணவனே போட்டிட வேண்டும் என்றார்!  கழிப்பறைதான் சுத்தமாய் இருந்திட வேண்டுமென்றார்!  Syllabusஐ சரியாக பின்பற்றிட வேண்டுமென்றார்!    Time tableல் உள்ள படி பாடம் நடத்திட வேண்டுமென்றார்!  பாட இணைச்செயல்பாடும் செய்திட வேண்டுமென்றார்! Dictationனும் எழுதிட வேண்டும் என்றார்! இரட்டை வரி நான்கு வரி ஆசிரியரரே எழுதி த்தர வேண்டுமென்றார்! ஒரு பிழையுமில்லாமல் திருத்த வேண்டுமென்றார்!  Maths kitம் science kitம் பயன்படுத்திட வேண்டும் என்றார்! Learning outcomes chartஐ தொங்க விட வேண்டுமென்றார்! மாணவனின் Loவை சரியாக குறித்து வைக்க வேண்டுமென்றார்!  TLM வைத்துத்தான் பாடம் நடத்திட வேண்டுமென்றார்! இத்தனை செய்தும் மாணவர்கள் வாசிப்பில் எழுதுதலில் குறையிருந்தால் C  D கிரேடுதான் போட்டிடுவாரென்றார்!
     விளக்கமும் கேட்டிடுவார் என்று சொல்ல!                           இத்தனையும் செய்திட நேரமேது என்று நானும் கேட்டு நிற்க!  மேலிடத்தில் சொன்னதை நான் சொல்லிவிட்டேன்! மற்றதெல்லாம் உங்கள் பாடு என்று தான் நழுவி க்கொள்ள!                          சனி ஞாயிறு உட்கார்ந்து TLM செய்ய! எங்கள் வீட்டுப் பிள்ளைகளுடன் உட்கார்ந்து நாங்களும் homework செய்ய! அதைக்கண்டு அவர்களும் ஏளனம் செய்ய! அதற்குள்ளே training msgம் வர! Test வைக்க நேரமில்லை! Fa(b) எப்படிப்போட? என்று தான் நெஞ்சம் கேட்க! ஏனிந்த வேலைக்கு வந்தோமென்று உள்ளம் நோவ! BP Sugar Ulcerம் வந்து உடலில் அண்ட! பள்ளியையே கட்டி க்கொண்டு அழு என்று வீட்டிலுள்ளோர் வசைபாட!......                        பாவிமக்கள் படும் துயரோ சொல்லொண்ணாதே!!!. வாட்சப்பில் எடுத்தது

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H