உதவியாக இருந்தாலும்
அதனால் நோய்களும் வருகிறது என்பதுதான் கவலை அடைய வைக்கும் அம்சம். அந்த
வகையில் குக்கர் சாதம் குறிப்பிடத்தக்கது. பொதுவாக குக்கர் சாதம்
சாப்பிடும்போது உடல்நல கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைப்பற்றி
இங்கு பார்ப்போம்.
இன்றைய சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் காலையில்
அலுவலகம் போகிற அவசரத்தில் விரைவில் எப்படி சமையலை முடிப்பது என
கவலைப்படும் பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்கள் பெரும் உதவியாக உள்ளது
என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் இந்த உபகரணங்கள் மூலம் செய்யும்
உணவுப்பொருட்களே சில நோய்களுக்கு காரணமாக அமைகிறது.