- மணப்பாறை அருகே துணி காயப்போட முயன்ற போது மின்சாரம் தாக்கி கணவன் - மனைவி பலி .
திருச்சி மாவட்டம் .மணப்பாறையை அடுத்த சித்தம்பட்டியை சேர்ந்தவர் தர்மர் (30) டிரைவராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி (25) நேற்று இரவு இப்பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. அப்போது அவ்வழியாக செல்லும் மின் வயர் ஒன்று வீட்டருகே துணி காயப்போட கட்டப்பட்டுள்ள இரும்பு கம்பி மீது உரசியபடி இருந்துள்ளது .இதனை கவனிக்காத ஜான்சிராணி இந்த கம்பியில் துணியை காயப்போட முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் அலறியபடி சாய்ந்துள்ளார்.
இந்த சத்தத்தை கேட்டு ஓடி வந்த கணவர் தர்மர் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவரையும் மின்சாரம் தாக்கியது - இதில் இருவரும் அதே இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்த புத்தாநத்தம் போலீசார் இருவது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
