
மேம்பால சுவற்றில் சென்று கொண்டிருந்தபோது, டென்ஷன் அதிகமாகிவிட்ட மகேஷ், ஓட்டி வந்த பைக்கை நிறுத்திவிட்டு, மேம்பால சுவற்றின் மீது ஏறி நின்று கீழே குதித்தார். இதில், கலெக்டர் ஆபீஸ் ஒட்டி உள்ள பஸ் ஸ்டேண்ட் அருகே வந்து தலைகீழாக விழுந்தார். அவரது தலை 2ஆக பிளந்து ரத்தம் கொட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி, மேம்பாலத்தில் நின்றபடி கதறி துடித்தார். அங்கு சென்று கொண்டிருந்தவர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். உடனடியாக சத்துவாச்சாரி போலீசுக்கு தகவல் தரப்படவும் அவர்கள் விரைந்து வந்தனர்.அப்போது புவனேஸ்வரியை ஆட்டோவில் உட்கார வைத்து ஸ்டேஷன் செல்ல முயன்றபோது, அவர் மயக்கம் அடைந்துவிட்டார். அதனால் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான விசாரணையும் நடக்கிறது. பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் சத்துவாச்சாரி மக்களை பதற வைத்துள்ளது.