whatsapp Fake Messages:எழுத்துப்பிழைகள் மற்றும் மிகவும் உண்மைகள் போல் பாசாங்கு செய்யும் விளம்பரத்தை அடியோடு தவிர்ப்பது மிகவும் நல்லது.
WhatsApp Fake Message: வாட்ஸ்ஆப் தனது 10-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் தன்னுடைய பயனர்களுக்கு 1000 ஜிபி இலவசமாய் வழங்கப்போவதாக ஒரு பொய்யான செய்தி வாட்ஸ்ஆப் பில் பரவத் தொடங்கியுள்ளது.
இது திட்டமிட்ட மோசடி பிரச்சாரம் என்று போர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த போலி செய்தியைப் படித்த ஐடி செக்யூரிட்டி நிறுவனமான இஎஸ்இடி யின் ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி கூறுகையில் ” தற்சமயம் அந்த செய்தியில் உள்ள லிங்கால் பெரிய தீங்கு விளைவிக்கும் ரான்சம்வேரோ மற்றும் பயனரின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கான சாராம்சமோ இல்லை. இணைய குற்றவாளிகள் விளம்பர கிளிக் வருவாயைப் பெறுவதற்காகவே இந்த இணைப்பை பயன்படுத்திகிறார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் எப்போதும் வேண்டுமானாலும் மாறலாம். இந்த லிங்கால் நாளைய நாட்களில் பெரும் ஆபத்தைக் கூட ஏற்படுத்த முடியும்” என்றார்கள்.
எழுத்துப்பிழைகள் மற்றும் மிகவும் உண்மைகள் போல் பாசாங்கு செய்யும் விளம்பரத்தை அடியோடு தவிர்ப்பது மிகவும் நல்லது என்று டேவிஸ் மீண்டும் புன்னகையோடு தெரிவித்தார்.
“போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்” என்ற வாக்கியம் நமக்கு ஒன்றும் புதிதல்ல.