Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மேஷராசி அன்பர்களே!
முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியா ளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ள நேரிடும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
ரிஷபராசி அன்பர்களே!
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், ஆதாயம் தருவதாகவும் அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் மனஸ் தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.
கடகராசி அன்பர்களே!
சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படும். பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன ரக ஆடைகளை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
சிம்மராசி அன்பர்களே!
உற்சாகமாகச் செயல்படும் நாள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட் டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர் பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர் கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.
கன்னிராசி அன்பர்களே!
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
துலாராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபா ரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
விருச்சிகராசி அன்பர்களே!
காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
தனுசுராசி அன்பர்களே!
மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். குடும்பத்துடன் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைக் குறிப் பிட்ட நேரத்துக்குள் முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
மகரராசி அன்பர்களே!
எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாலையில் வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி யான சம்பவங்கள் நடைபெறக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.
கும்பராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் ஏற்படும். சகோதரர் களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அலுவலகத் தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
மீனராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு அதிகாரிகள் உதவி செய்வார்கள். வியா பாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளிடம் அனுசரணை யாக நடந்துகொள்ளவும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருக்கும் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








