அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடு
விதித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு உயர் நிலை மற்றும்
மேல்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதியானோர்
பட்டியலை, தமிழக பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது.இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடந்த, 2003, 2004ம் ஆண்டுகளில், இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களாக தேர்வானவர்கள், மாதம், 4,500 தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றினர். அவர்களுக்கு, 2006 ஜூனில், பணி வரன்முறை செய்யப்பட்டது.








