இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறுவதாவது;ஆசியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்குவார். 90 ஆயிரம் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும். அரசு பல திட்டங்களை தீட்டினாலும் அதை மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்பவர்கள் ஆசிரியர்கள்தான். தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.
பின்லாந்து நாட்டை விட கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். முதல்வர் ஒப்புதலை பெற்ற பிறகு ஒரு வாரத்தில் பின்லாந்து நூலகங்களுக்கு தமிழ் நூல்கள் அனுப்பப்படும். தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்கள் பின்லாந்து நூலகங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.









