அறிக்கை
06.09.2019
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
இன்று 06.09.2019 முதல் ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்துகின்ற ஆர்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ இன்று ( 06.09.2019 ) முதல் தொடர் போரட்டங்களை அறிவித்துள்ளது, இந்த போர்ட்டங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை காரணம் நாம் நம் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிட்டத்தயே நடைமுறை படுத்த வேண்டும் என்று பலக்கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு செவிசாய்க்க மறுக்கிறது.
இந்த சூழ்நிலையில் நம் நியாமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நடக்கும் போராட்டங்களால் மட்டும் தமிழக அரசு நமது கோரிக்கையை ஏற்று உணர்வை அறிந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமா என்ற ஐயம் ஏற்படுவதாலும்
இந்த மாதம் அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற இருப்பதாலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலன் கருதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு இந்த போரட்டத்தில் கலந்துக்கொள்ள வில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு








