கதையுடன் நிஜம் விழிப்புணர்வு CONSUMER ராஜா சத்தியமங்கலம். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கதையுடன் நிஜம் விழிப்புணர்வு CONSUMER ராஜா சத்தியமங்கலம்.

கதையுடன் நிஜம்
 விழிப்புணர்வு 
♨♨♨♨♨♨♨♨♨♨♨♨  CONSUMER ராஜா சத்தியமங்கலம்.
.
❌அபாயம்❌

தனது திருமணத்திற்காக எடுத்த விடுமுறைகள் முடிந்து, தனது காவல் நிலையத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் வேலை செய்ய தொடங்கினார் அந்த சப் இன்ஸ்பெக்டர்.

காவல்நிலையத்திற்கு அருகே வீடு,
இனி சரியான வேளையில், சரியான உணவை உண்ணலாம் என கனவில் மிதந்து கொண்டு இருக்கிற வேளையில்,
அவன் முன் இருந்த போன் அலற தொடங்கியது.

போனை எடுத்த சில நொடிகளில், பதற்றத்துடன்
" உடனே அந்த இடத்துக்கு வந்துரேன் " எனக் கூறி இணைப்பினை தூண்டித்து,  உடனே தடயவியல் நிபுணர் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அடுத்த 10 நிமிடத்தில் தீ சூழ்ந்த அந்த இடத்தை காவல் குழுவினரும், தடயவியல் நிபுணர் குழுவினரும் அடைந்த போது,

அங்கே தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி கொண்டு இருந்தனர். சைரன் ஒலியுடன், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. சில நிமிட போரட்டத்திற்கு பிறகு அந்த வீட்டில் எரிந்த தீ அணைக்கப்பட்ட உடன்,
சப் இன்ஸ்பெக்டர், தடயவியல் நிபுணர் குழுவுடன், புகை மண்டலத்துடன், நிசப்தமாக இருந்த வீட்டினுள் நுழைந்தார்.
.

வீட்டினுள் யாரேனும் உள்ளனரா என கவனமாக பார்த்து கொண்டு இருக்கும் வேளையில், சமையலறை பகுதியில் இருந்து,"
.
என்னங்க, என்னங்க " என மெல்லிய குரல் கேட்க தொடங்கியது. பதற்றத்துடன் சப் இன்ஸ்பெக்டர், சமையல் அறை பகுதியை அடைந்ததும், அவரின் கை கால்கள் நடுங்கியது.

முழுவதும் தீயினால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த கணவனின் உடலருகே, 90% தீயினால் பாதிக்கப்பட்ட மனைவி, கணவனை அழைத்தவாறு கிடந்தாள். அடுத்த சில நொடிகளிலே,

இருவரும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டனர். அவர்களுடன் சப் இன்ஸ்பெக்டரும், ஆம்புலன்சில் ஏறினார். வாழ்வில் முதல் முறையாக, ஒருவர், உயிருக்கு போராடுவதை காண முடியாமல் தவித்தார்.

காவல் துறை வழக்கப்படி, வாக்குமூலம் பெற வேண்டிய கட்டாயத்தில், மனவேதனையுடன், உயிருக்கு போராடி கொண்டு இருந்த பெண்ணிடம், தீ விபத்து எப்படி நடந்தது, என கேட்க தொடங்கினார்.
.
அதற்கு அப்பெண், " எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகுது. நேத்து தான் இந்த வீட்டுக்கு குடி வந்தோம். நேத்து பால் காய்ச்சுன போது, எதிர்பாரத விதமா, சூடான பால் என் கையில கொட்டிடுச்சு. எனக்கு சிரமம் கொடுக்க வேணாம்னு நெனச்ச என் கணவர், இன்னைக்கு சமையல, அவரே பண்ணுறேனு சொன்னாரு.
.
நான் சமையலுக்கு தேவையான பொருள்களை வாங்கிட்டு வீட்டுக்குள்ள நூழையறப்ப தான் அந்த கோர சம்பவம் என் கண் முன்னாடி நடந்துச்சு.
.
பெரிய வெடி சத்ததுடன் வந்த தீ,  என் கணவர் மேல் பட்டு எரிய ஆரம்பிச்சு. நான் அவர காப்பாத்த போனப்ப, என் மேலயும் தீ பரவிடுச்சு. எங்க வீட்டுல இருந்த கேஸ் ஸ்டவ்வு, கேஸ் ட்யூபு, ரெகுலேட்டரு எல்லாமே புதுசு தான். எல்லாமே சரியா இருந்தும் எப்படி வெடிச்சதுனு தெரியல. தயவு செஞ்சி என்னைய காப்பாத்திடாதீங்க. " என கூறிய சில நிமிடங்களில், அவள் தன்னுடைய கணவனை சொர்க்கத்தில் சந்தித்தாள்.  ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்தது.
.

விபத்து தொடர்பாக, உயர் அதிகாரியை சந்திக்க, காவல் நிலையம் வந்த போது, சப் இன்ஸ்பெக்டர் மொபைலுக்கு, தடயவியல் நிபுணரிடம் இருந்து போன் கால் வந்தது. போனில் தடயவியல் நிபுணர், விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டதையும், எவ்வாறு நடந்தது என விவரித்ததும் பீதியுற்றார்.

காலண்டரில் தேதியைப் பார்த்தார். 10, ஜனவரி, 2019 உடனே தனது மனைவிக்கு கால் செய்தார்.
.
அவள் போனினை எடுக்கவில்லை. பதற்றத்துடன் வீட்டை நோக்கி ஓடினார்.
.
வீட்டை அடைந்ததும், சமையலறைக்குள் வேகமாக சென்று, சிலிண்டரின் மேல் பகுதியினை பார்த்தார். அதில் D-18 என எழுதப்பட்டு இருந்தது. உடனே, அந்த சிலிண்டரை அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், போன் செய்து, காலாவதியான சிலிண்டரை திரும்ப பெற்று கொள்ளுமாறு கூறி நிம்மதி அடைந்தார்.
.
நம் வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர்களுக்கு
Expiry Date உள்ளது.
.
அது cylinder body ஐயும், Top ring பகுதியையும் இணைக்கும் மூன்று Metal strip இல், ஏதாவது ஒன்றில், உட்புறமாக,

A to D எழுத்தில், ஏதேனும் ஒரு எழுத்தில், ஏதாவது ஒரு எண்ணுடன் சேர்க்கப்பட்டு,  பெயிண்டில் எழுதப்பட்டிருக்கும்.
.
அதை புரிந்து கொள்ளும் முறை.
.
A - January to March
.
B - April to June
.
C - July to September
.
D - October to December
.
எண்கள் - வருடத்தை குறிக்கும்
.
D-18 என்றால் December, 2018  கழித்து அந்த சிலிண்டரை நாம் உபயோகிக்க கூடாது.
.
ஒரு வேளை காலாவதியான கேஸ் சிலிண்டரை உபயோகித்தால்,  அந்த சிலிண்டரில் இருந்து, எந்த நேரத்திலும், கேஸ் கசிவு ஏற்பட்டு,
.
நம் உயிரை அது பறிக்கும். கேஸ் சிலிண்டர் வாங்கும் போது *Expiry date ஐ சரி பார்த்து வாங்கினால், சமையல் மட்டும் அல்ல , நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும்.

*( இன்றே உங்களது வீட்டில் உள்ள சிலிண்டரின் *Expiry Date – ஐ சரி பாா்த்துக் கொள்ளவும்)

      விழிப்புணர்வு
.............
CONSUMER PROTECTION CENTRE, PERUNDURAI

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H