நீதி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017 -ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான
பள்ளிக் கல்வித் தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தையும்,
தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
அதேவேளையில் உத்தரப்பிரதேசம், பிகாா், ஜாா்கண்ட் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன.நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களின் கல்வித் தரத்தை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து நீதி ஆயோக் வகைப்படுத்தியுள்ளது.
ஆசிரியா் -மாணவா் விகிதம், மாணவா்களின் தோச்சி விகிதம், பள்ளிகளின்
உள்கட்டமைப்பு வசதி, நிதிகளை திறம்படகையாளுதல் உள்ளிட்ட 44 காரணிகளை
அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.நீதி ஆயோக்
திங்கள்கிழமை வெளியிட்டு உள்ள பள்ளி கல்வியின் தர வரிசை பட்டியலில் நாடு
முழுவதும் பெரும் வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.பள்ளிக் கல்வியின்
தரத்தில் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பெண் பட்டியலில் 20 பெரிய
மாநிலங்களில், கேரளா 76.6 சதவீத மதிப்பெண்ணுடன் முதல் இடத்திலும்,
உத்தரப்பிரதேசம் 36.4 சதவீத மதிப்பெண்களுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
தமிழகம் 73.4 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.அதேவேளையில் உத்தரப்பிரதேசம், பிகாா், ஜாா்கண்ட் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன.நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களின் கல்வித் தரத்தை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து நீதி ஆயோக் வகைப்படுத்தியுள்ளது.







