சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா?. அல்லது கெட்ட முட்டையா? என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது, தெரிந்து கொள்வோமா!
Perfect Egg :
1) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் முட்டையை மெதுவாக
போடவும். முட்டை அடிபாகத்தில் தங்கிவிட்டால் முட்டை சாப்பிடுவதற்கு ஏற்ற
முட்டை என்று அர்த்தம்.
மூழ்காமல் ஒரே ஓரத்தில் மிதந்தால் அந்த முட்டை சாப்பிட ஏற்றதல்ல. அந்த
முட்டையை சாப்பிடுவது உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
2) முட்டையை முகர்ந்து பார்த்தால் ஒரு விதமான சல்ஃபர் வாசனை வந்தால்,
அது கெட்டுப் போன முட்டை என்று அர்த்தம். எந்தவித வாசனையும் இல்லாமல் இருந்தால் அது நல்ல முட்டை.
கொரில்லா படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசி இருக்கிறேன் - ராதாரவி
3) முட்டையை காதுக்கு அருகில் வைத்துக்கொண்டு நன்றாக குலுக்கினால், ஏதாவது
அசைவது போன்று தெரிந்தால் அது நல்ல முட்டை இல்லை என்று அர்த்தம்.
4) பழைய முட்டையின் மஞ்சள் கருவானது உடனடியாகி பரவி விடும், ஆனால் புதிய முட்டையின் கரு அசையாமல் அப்படியே இருக்கும்.
5) முட்டையின் ஓட்டில் ஏதாவது விரிசல் இருந்தாலோ அல்லது பவுடர் இருந்தாலோ அந்த முட்டை நல்லதல்ல
6) முட்டையை மெழுகுவர்த்திக்கு நேராக வைக்க, முட்டையின் வட்டமான பகுதியில்
காற்று பைகள் 3.175 மிமீ-க்கு குறைவாக இருந்தால் அது புதிய முட்டை என்றும்
அந்த அளவிற்கு பெரியதாக இருந்தால் அது பல நாட்கள் ஆகிய முட்டை என்றும்
அறிந்து கொள்ளலாம்.








