தமிழக அரசின் கருணைப் பார்வைபட்டால் அனைத்து வழக்குகளுக்கும் முழு தீர்வுக்கு வாய்ப்பு.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் TET அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்கள் சற்றே தாமதமாக அமலாக்கம் செய்தன. அதன்படி கடந்த அரசாணை எண் 181 ல், உருவாக்கம் பெற்றாலும் அதை தமிழகம் முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் முறையாக செயல்படுத்த பல மாதங்கள் ஆனது.
ஆசிரியர்கள் பணி நியமனங்களில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள்
16/11/2012 அன்று தான் தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், செயலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்த இடைவெளியில் பணி நியமனம் பெற்றவர் சுமார் 1500 ஆசிரியர்களுக்கும் TNTET நிபந்தனைகள் பற்றி கூறாமல் பணி நியமனம் தரப்பட்டன .
ஆனால் அதன் பின்னர் 16/11/12 க்கு பிறகு அந்த 1500 ஆசிரியர்கள் அனைவருக்கும் TNTET நிபந்தனைகள் பொருந்தும் எனவும், விரைவில் TETல் கட்டாயத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர இயலும் என்ற நிபந்தனைகளில் தள்ளப்பட்டனர்.
அன்றிலிருந்து இன்று வரை ஊதியம் மட்டுமே தரவும், மற்ற பணிப்பயன்கள் மறுக்கப்பட்ட நிலையிலும் இந்த நிபந்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்னும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை ஊதியமும் பல்வேறு மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த ஆசிரியர்களுக்கு தர மறுத்து வருகின்றனர்.








