☸மேஷம்:-
மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுபவிரயம் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கவனமாக இருக்கவும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கை தேவை. கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். சகோதரர்களிடம் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : சுபவிரயம் உண்டாகும்.
கிருத்திகை : கவனத்துடன் இருக்கவும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸ரிஷபம்:-
விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். இறைவழிபாடு மேற்கொள்வீர்கள். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயம் உண்டாகும். பணிகளில் கவனம் தேவை. மகான்களின் தரிசனம் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : சுபவிரயம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : நிதானம் தேவை.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மிதுனம்:-
பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். நிர்வாகத்தில் தனித்திறமைகள் புலப்படும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
திருவாதிரை : தனித்திறமைகள் புலப்படும்.
புனர்பூசம் : உறவுகள் மேம்படும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கடகம்:-
வெளிநாட்டு பயணங்களால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : நன்மை கிடைக்கும்.
பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
ஆயில்யம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸சிம்மம்:-
உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். பொருட்கள் சேர்ப்பதற்கான சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : உறவுநிலை மேம்படும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கன்னி:-
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுக்களால் நற்பலன்கள் உண்டாகும். அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் வரும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : நற்பலன்கள் உண்டாகும்.
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸துலாம்:-
பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் சாதகமாகும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : உதவிகள் சாதகமாகும்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸விருச்சகம்:-
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக அமையும். செய்யும் பணிகளில் பிறரின் விமர்சனங்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : அமைதி வேண்டும்.
அனுஷம் : வாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : விமர்சனங்கள் உண்டாகும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸தனுசு:-
கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.
பூராடம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
உத்திராடம் : சுபமான நாள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மகரம்:-
எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல் திட்டம் வகுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
திருவோணம் : தேடல் உருவாகும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கும்பம்:-
வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகள் எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : எச்சரிக்கை வேண்டும்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மீனம்:-
நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கால்நடைகளால் சில விரயம் ஏற்படும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த பணிகளால் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : இலாபம் அதிகரிக்கும்.








