காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28-11-2019 - T.தென்னரசு - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28-11-2019 - T.தென்னரசு



காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
28-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 991
அதிகாரம் : பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
 பண்புடைமை என்னும் வழக்கு.

மு.வ உரை:

பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

கருணாநிதி  உரை:

யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:


எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி


நாம் ஒவ்வொருவரும் துன்பத்தில் உள்ள ஒருவருக்காவது உதவி செய்து அவரது வாழ்வை முன்னேறச் செய்ய வேண்டும். அனைத்து மக்களும் இதனைக் கடைபிடிக்க வேண்டும்.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி


A fog cannot be dispelled with a fan

சூரியனை கையால் மறைக்க முடியுமா?
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Author - நூலாசிரியர்
2. Autonomy - சுய அதிகாரம்
3. Aviary - பறவைக் கூண்டு/பண்ணை
4. Award - பரிசு/விருது

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. பாகிஸ்தான் நாட்டின் அரசு மொழி எது ?

 உருது

2. வருடந்தோறும் கழுதைக் கண்காட்சி நடைபெறும் நகரம் எது ?

 அகமதாபாத் (குஜராத்)

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. ஏரியில் இல்லாத நீர், தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல - அது என்ன ?

 கண்ணீர்

2. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும் தான். அவன் யார் ?

 நுங்கு

✡✡✡✡✡✡✡✡
Daily English
1. These are Brinjals
2. Those are Cars
3. We shall go around my house

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

காசினி கீரை

🍃 குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் அதிகளவில் பயிரிடப்படும் பயிர் காசினிக்கீரையாகும்.

🍃 உலகளவில் இந்தியா காசினிக்கீரை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானது.


🍃 காசினி பூக்கள் உற்பத்தியாவதற்கு குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை அவசியம்.

🍃இக்கீரை கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உள்ளதும் போச்சு

ஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது. அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது. அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரியது. அதனால் மானை சாப்பிட ஆசைப்பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத்தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது. தனக்கு உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டது.

சிங்கமானது அந்தக் கலைமானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது. சரி முயலையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த்தால் அங்கு முயலைக் காணவில்லை. முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்துடன் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதையும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது.

நீதி :

பேராசைப் பட்டால் கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கேட் தேர்வை எழுத 8.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டெல்லி தொழில்நுட்பக் கழகம் தெரிவித்துள்ளது.


🔮தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

🔮ஆசிய வில்வித்தை போட்டியில் ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.

🔮அடுத்த மார்ச்சுக்குள் 13 செயற்கைக் கோள்கள் ஏவ திட்டம்... சந்திராயன் -3 திட்டம் நிச்சயம் உண்டு : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி.

🔮தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.

🔮தமிழக அரசின் சார்பில் பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி வழங்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்.


🔮தற்போதுள்ள 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான இரண்டரை மணி நேர, தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

🔮ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 14 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்.

HEADLINES

🔮Growth may have slowed but there is no recession, says Nirmala Sitharaman.

🔮Cartosat-3 and 13 other nano satellites put into orbit by PSLV C-47.

🔮Australian PM to return three National Gallery idols stolen from India.

🔮FOOTBALL: Dybala's stunning free kick gives Juventus win over Atletico.


🔮21 Pakistani migrants granted Indian citizenship by Rajasthan government.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H