🔹திண்டுக்கல்லில் (சனிக்கிழமை) பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாவட்ட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.*
*இதில் கலந்து கொண்டு ராமகிருஷ்ணன், "மத்திய, மாநில அரசுகளின் மோசமான கல்விக்கொள்கையின் காரணமாக தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை இழுத்து மூட அரசு தீவிரம் காட்டி வருகிறது.*
🔹அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் மாணவர்களின் இலவச கல்வி கேள்விக்குறியாகும். எனவே அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
🔹தமிழகத்தில் பழங்குடியின மக்களுக்கு என தனியாக அரசு பள்ளிகள் உள்ளன. ஆனால் அந்த பழங்குடியின மக்கள் வாழும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன.*
🔹2008 - 09ம் ஆண்டு கண்கெடுப்புப்படி பழங்குடியின பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 42 ஆயிரம் ஆக இருந்தது தற்போது 17 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேபோல், ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 1 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.*
🔹திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.*
*இது மத்திய மாநில அரசுகளின் கல்விக்கொள்கையால் குறைகிறது.*
🔹அரசு பள்ளிகள் மூடப்பட்டால் இலவச கல்வி இனி சாத்தியமில்லை. ஏழை எளிய குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே இது போன்ற மாநாடுகளை நாங்கள் நடத்துகிறோம். அரசு இந்த பள்ளிகளை மேம்படுத்திட வேண்டும். இலவச கல்வியை உறுதிப்படுத்திட வேண்டும்" என்று பேசினார்








