சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம் . முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
எதிர்பார்த்த வங்கிக் கடன் இப்போது கிடைக்கும். காசோலைகள் எதுவும் தருவதாக
இருந்தால், கவனம் தேவை. ஒப்பந்தங்களை படித்துப் பார்த்து திருப்தி ஏற்பட்ட
பின் கையெழுத்திடுங்கள். திருமணமாகாதவர்களுக்கு இந்த வாரம் திருமணம்
உறுதியாகும்.
உத்தியோகம் -
பெரிய மாறுதல் ஏதும் இல்லை. சகஜ நிலையில் இருக்கிறது. முடித்துவிட்டதாக
நினைத்த வேலையில் மீண்டும் திருத்தங்கள் செய்ய வேண்டிய நிலை வரும். வங்கி
அதிகாரிகள், ஊழியர்கள், துறை சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன் நன்கு
பரிசீலனை செய்ய வேண்டும். சிறு நிறுவனங்கள், கடைகளில் வேலை செய்பவர்கள்,
வேலையை விட்டு விலகி வேறு நிறுவனத்திற்கு சேரும் எண்ணத்தை சற்று தள்ளி
வையுங்கள், இந்த வாரம் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பொதுவாக எந்தத்
துறையில் நீங்கள் பணிபுரிந்தாலும், வேலையை விட்டு விலகும் எண்ணத்தை இந்த
வாரம் செய்ய வேண்டாம்.
தொழில் -
தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. எதிர்பார்த்த பணம் இந்த வாரக்
கடைசியில் உங்கள் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
கட்டுமானத் தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ரியல்
எஸ்டேட் துறையினர் இந்தவாரம் விற்பனைகள் அதிகமாவதை கண்டு மகிழ்ச்சி
அடைவார்கள். பத்திரப் பதிவு செய்வீர்கள். பங்கு வர்த்தகத் துறையில்
இருப்பவர்களுக்கு கணிசமான முன்னேற்றம் உண்டு. ஏற்றுமதி இறக்குமதி தொழில்
செய்பவர்களுக்கு புதிய நிறுவனத்தோடு ஒப்பந்தங்கள் உண்டாகும்.
பெண்களுக்கு -
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். வேலைக்குச் செல்லும்
பெண்களுக்கு, நிர்வாகத்தின் சார்பில் சில அழுத்தங்கள் கொடுக்கப்படும்,
பணிச் சுமை அதிகமாகும். குறைவான நேரம் ஒதுக்கி பெரிய வேலையை முடிக்கச்
சொல்வார்கள். பொறுமை அவசியம்.








