மேஷம்:-
புது முயற்சிகளை உத்வேகத்துடன்
துவங்குவீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள்
நினைத்தபடி ஈடேறும். எதிர்கால தேவைகள் நிறைவேறும். மற்றவர்களால்
மதிக்கப்படுவீர்கள்.
ரிஷபம்:-
கிரகங்களின் பார்வைகள் சாதகமாக உள்ளன. மனம்
விரும்பிய நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி
பெறுவீர்கள், மகிழ்ச்சியான நாள்.
மிதுனம்:-
எதிர்காலம் மற்றும் வீட்டுத்தேவைகளை
நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டுவீர்கள். பணியிடங்களில் சக ஊழியர்களால்
மதிக்கப்படுவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
கடகம்:-
நடைமுறை சிக்கல்களை கடந்து வெற்றி
பெறுவீர்கள். நம்பிக்கை நிறைவேறும். தாமதங்களை கண்டு மனம் துவளாமல்
இருந்தாலே, மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வாகன போக்குவரத்தில் அதிக கவனம்
அவசியம்.
சிம்மம்:-
போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதிரடி சாகசங்களை செய்து மற்றவர்களை
தன்பக்கம் ஈர்ப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கன்னி:-
கிரகங்களின் சாதகமான பார்வையினால்
நினைத்ததை முடிப்பீர்கள். வீட்டு உறுப்பினர்களின் தேவைகளை
நிறைவேற்றுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளால் மனசஞ்சலம் அடைவீர்கள். செய்த
தவறுகளுக்காக மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க தயங்கமாட்டீர்கள்.
துலாம்:-
சிறிய விசயங்களும் மனசஞ்சலம் ஏற்படுத்தும்
என்பதால், அதிக விழிப்புணர்வு அவசியம். காத்திருந்தால் அனைத்தும் கனியாகும்
என்பதை உணர்வீர்கள். எண்ணியது ஒன்று நடப்பது இன்னொன்று ஆக உள்ளதே என மனம்
வருந்துவீர்கள். பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள்.
விருச்சிகம்:-
கேட்ட உதவிகள் காலம் கடந்து கிடைக்கும்.
மாற்றுக்கருத்து உடையவர்களிடம் வார்த்தைகளில் நிதானம் காப்பது அவசியம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.
தனுசு:-
பணியிடம் மற்றும் தொழில்சார்ந்த
விவகாரங்களில் வார்த்தைகளில் நிதானம் காப்பது நல்லது. உங்களின்
கருத்துகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடந்த கால அனுபவங்கள் தற்போது
உதவும். மகிழ்ச்சியான நாள்.
மகரம்:-
கிரகங்களின் சாதகமான பார்வை இடம்மாறுவதால்
செய்யும் காரியங்களில் நேர்த்தி குறையும். மனசஞ்சலத்துடன் இருப்பதால்
எதிலும் மனம்ஒட்டா நிலை ஏற்படும். உணவு விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.
கும்பம்:-
மற்றவர்கள் தங்களை புரிந்துகொள்ள கடும்
பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தங்களின் கோரிக்கைகளை மற்றவர்கள்
நிராகரிக்க வாய்ப்புள்ளதால், அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. மன
அமைதிக்கு தியானம் செய்யவும்.
மீனம்:-
மற்றவர்களிடம் குறைகாண்பது எளிது. அதை
நிவர்த்தி செய்வது கடினம் என்பதை உணர்வீர்கள். நண்பர்கள் மற்றும்
உறவினர்களிடம் இருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். விரைவில் வெற்றி
பெறுவோம் என்ன தன்னம்பிக்கை ஏற்படும்.








