டிசம்பர் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு மொத்தமாக ஒன்பது நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இருக்கும் அனைத்து வங்கிகளுக்கும், அரசு விடுமுறை நாட்களிலும்,
இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும்
விடுமுறை நாட்கள் ஆகும்.
அந்த வகையில் எந்த மாதமும் இல்லாமல், இந்த டிசம்பர் மாதத்தில் 5 ஞாயிற்றுக்
கிழமைகள் வருகின்றது. மேலும், டிசம்பர் 14ம் தேதி இரண்டாவது
சனிக்கிழமையும், டிசம்பர் 28-ம் தேதி நான்காவது சனிக்கிழமையும் வருகின்றது.
இதற்கிடையில் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையும் வருகின்றது.
மேலும், அதற்கு அடுத்த நாளான 26ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கும் பாக்ஸிங் தினமும் வருகின்றது.
இதன் காரணமாக மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,
வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளை முன் கூட்டியே திட்டமிட்டு
முடித்துக் கொள்வது நன்மை பயக்கும். ஆனால், 26 ஆம் தேதி பாக்சிங் விடுமுறை
குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. எனவே, 9 நாட்களில் 8 நாட்கள்
விடுமுறை உறுதியாகின்றது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...