உண்மைச் செய்தி
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மணி வரை அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் முதுகலை ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தலைமை ஆசிரியர்களுக்கு பிறப்பித்த வாய்மொழி உத்தரவை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக *நிர்வாகக்குழு
மதிப்பு மிகு.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையிட சென்ற போது மதிப்புமிகு.முதன்மைக் கல்வி அலுவலர் 4.30 மணிக்குமேல் பள்ளிகளை பார்வையிட சென்று விட்டு அலுவலகம் வரவில்லை . அப்போது மேல்நிலைப் பள்ளி நேர்முக உதவியாளர் அவர்கள் தொலைபேசியில் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு பேசிவிட்டு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் நாளை மாலைக்குள் தகவல் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்' . மதிப்பு மிகு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும், மேல்நிலை நேர்முக உதவியாளர் அவர்களுக்கும் நன்றிகளை நிர்வாகக் குழு தெரிவிக்கிறது '.
கிராமப்புற மாணவர்கள் போக்குவரத்திற்கு பேருந்து வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருவதையும் எடுத்துக் கூறியுள்ளோம். நாளை முடிவை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை நம் பேரியியக்கம் மேற்கொள்ளும்.
இவண்
முனைவர்.மு. முருகேசன்
மாநில செய்தித் தொடர்புச் செயலாளர்
கா.ஜெகதீஷ் குமார் மாவட்டத் தலைவர்
லூ. செல்மா பிரியதர்சன் மாவட்ட செயலாளர்
தோ. பிரான்சிஸ் பிரிட்டோ
மாவட்ட பொருளாளர்
சு. நல்லதம்பி
மாவட்ட செய்தி தொடர்பாளர்
மற்றும்
வட்ட,மாவட்ட நிர்வாகிகள்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
திண்டுக்கல் மாவட்டம்







