இன்றைய நிலவரப்படி சென்னையில் வெங்காயத்தின் விலை கிலோ 130 ரூபாய். இதைக் கேட்கும்போதே கண் கலங்கும் நமக்கு இதை வாங்கி சமைப்பது எத்தனைக் குடும்பங்களுக்கு சாத்தியம்..? அதற்கு சிறந்த தீர்வு வெங்காயமே இல்லாமல் சமைப்பதுதான். அப்படி என்னவெல்லாம் சமைக்கலாம் என்று யோசனை சொல்கிறது இந்தக் கட்டுரை.
மோர்க் குழம்பு : மோர்க் குழம்பு வெங்காயமே இல்லாமல் தாளித்து சாப்பிட்டாலும் அற்புத சுவைதான். அதோடு கூடவே தேங்காய், காய்ந்த மிளகாய், உடைத்த கடலை இஞ்சி ஆகியவற்றை வதக்கி அரைத்து மோரில் கலந்து கொதிக்க வைத்து தாளித்து சாப்பிடலாம். வேலையும் சிம்பிளாக முடிந்துவிடும்.
புளி
தொக்கு : புளித் தொக்கு என்றாலே புளிதான் மூலதனம் என்பது அறிந்ததே..!
இதில் வெங்காயம் மட்டுமல்ல தக்காளி கூட தேவைப்படாது. எனவே புளிக்குழம்பு
வைத்து சோற்றில் கிளறி சாப்பிடுவதும் அதற்கு பொருத்தமான சைட்டிஷும்
அட்டகாசமாக இருக்கும்.








