நலமான வாழ்வுக்கு நான்கு விஷயங்கள்
பிழைத்திருத்தல் என்பது வேறு:
வாழ்ந்திருத்தல் என்பது வேறு. பிழைத்துக் கிடப்பதற்கு பெரிய சிந்தனையோ விஷய
ஞானமோ தேவையில்லை. ஆனால் வாழ்ந்திருப்பதற்கு நான்கு விஷயங்கள் தேவை.
வாழ்வை பற்றிய தெளிவு அவசியம். சிரத்தை இல்லையெனில் பல சிக்கல்கள்
வந்துவிடும். அதனால்தான் சிரத்தையுள்ளவனே ஆன்மாவைப் பற்றிய அறிவை
பெறுகிறான் என்கிறது கீதை. ஆன்மா அறிவை மட்டுமல்ல; நலமிகு வாழ்வை குறித்த
அறிவையும் அவன்தான் பெறுகிறான். மனமும் உடலும் சீரான நிலையில் இருந்தால்
பிரச்சினைகளுக்கு இடமிருக்காது.







