தமிழகத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் பணிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை டிப்ளமா படிப்பு, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மற்றும், 'நெட், செட்' போன்றதகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நவம்பர், 15ல் முடிந்தது.இந்நிலையில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், அனுபவம் மற்றும் இதர கல்வி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, டிச., முதல் வாரத்தில் அனுமதி அளிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.