இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர் ஏ. சண்முகசுந்தரம் அளித்த அறிக்கையின்படி,
ஆதிதிராவிதர், பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள விடுதி காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் ஜூலை 20 முதல் 22 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.
விண்ணப்ப எண் 1 முதல் 280 வரை உடையவர்கள் 20ஆம் தேதி காலையும் ,
281 முதல் 463 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 20 ஆம் தேதி மாலையும் ,
மற்ற விண்ண ப்பதாரர்களில் 1 முதல் 525 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 21 ஆம்தேதி காலையும்,
526 முதல் 1050 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 21 ஆம் தேதி மாலையும் , 1051 முதல் 1575 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 22 ஆம் தேதி காலையும்,
1576 முதல் 2205
வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 22 ஆம் தேதி மாலையும் நேர்காணலில் பங்கேற்கலாம் எனவும் அறிவிப்பு.








