ஆன்லைன் இல் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
www.parivahan.gov.in கிளிக் செய்யுங்கள்தமிழ்நாடு என்பதை தேர்வு செய்யுங்கள்.
இடது பக்கத்தில் "டிரைவிங் லைசென்ஸ்"(Driving Licence)
அப்ளை ஆன்லைன்"(Apply Online) ஆப்ஷன் தேர்வு செய்யுங்கள்.
புது கற்றுணர் உரிமம் (New Learner Licence)
புது ஓட்டுனர் உரிமம் (New Driving Licence)
ஓட்டுனர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other)
என இதர சேவைகள் பலவும் உங்கள் சேவைக்கு இருக்கும்.
உங்கள் முதல் ஓட்டுனர் உரிம சான்றிதழ் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் கற்றுணர் உரிமம் வாங்குவது மிக அவசியம்.
உங்கள் விவரங்களை கற்றுணர் உரிமம் ஃபார்ம் இல் பூர்த்தி செய்யுங்கள்.
கியர் வாகனத்திற்கு கற்றுணர் உரிமம்
கியர் இல்லா வாகனத்திற்கான கற்றுணர் உரிமம் என்பதைக் கவனமாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இறுதியாக சப்மிட் கிளிக் செய்து உங்கள் ஃபார்ம் சமர்ப்பியுங்கள்.
அடுத்து ஆன் லைன் மூலம் கட்டணம் கட்டுங்கள்
இப்பொழுது உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ் கிடைக்கும். அதை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்
LLR சான்று பெற்று 30 நாட்கள் முடிந்தவர்கள் மட்டுமே ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும்
பிறகு வெப்சைட்டில் பர்மனன்ட் லைசன்சுக்கு அப்ளை செய்ய வேண்டும். உங்களின் லேர்னர் லைசன்ஸ் தகவலை அங்கு நிரப்பி சப்மிட் செய்ய வேண்டும்.
அப்பாயின்ட்மென்ட் தேதியில் சம்பந்தப்பட்ட ஆபீஸ் சென்று வாகனம் ஓட்டும் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
➕ ➕ ➕ ➕ ➕ ➕ ➕ ➕ ➕









