Hi - Tech Lab Smart Classroom - 2 Days RP Training for BTs - SPD Proceedings : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 2 January 2020

Hi - Tech Lab Smart Classroom - 2 Days RP Training for BTs - SPD Proceedings :

அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு ஜனவரி 6,7ல் பயிற்சி
தமிழகத்திலுள்ள 3090 உயர்நிலை மற்றும் 2939 மேல்நிலைப் பள்ளிகளில் ( 6029 ) Hi - Tech Lab Smart Classroomக்கு தேவையான தளவாடங்கள் தொடர்ந்துநிறுவப்பட்டு டிசம்பர் 2019க்குள் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது .

Annexure I Hi Tech Lab BT Teacher List-click Here 
IMG_20200101_141354

IMG_20200101_141532

IMG_20200101_141543

இந்நிலையில் , நிறுவப்பட்ட Hi - Tech Lab Smart Classroom வசதியினை அன்றாட வகுப்புகளோடு அனைத்து பாடத்திற்கும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஏற்கனவே திட்டமிட்டபடி முதற்கட்டமாக அனைத்து மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்களுக்கு ( PG Teachers ) கடந்த 2019 டிசம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி இயக்ககம் மூலமாக 2 நாள் Hi - Tech Lab Smart Classroom கருத்தாளர்கள் ( KRP ) பயிற்சிகள் நடந்து முடிந்தது .
இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ( BT Teachers ) இப்பயிற்சியினை கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது . எனவே வருகின்ற 2020 ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான உண்டு உறைவிட Hi - Tech Lab Smart Classroom கருத்தாளர் பயிற்சிக்கு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை ( BT teachers ) பணிவிடுப்பு செய்து அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .

மேலும் , இந்த இரண்டு நாள் பயிற்சியானது இரண்டு வெவ்வேறு இடங்களில் ஒரே நாட்களில் நடைபெறுவதால் , கருத்தாளர் பயிற்சிக்கு பங்கேற்கும் ஆசிரியர்களை மாவட்டம் வாரியாக இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது . இதில் முதல் 16 மாவட்டங்களை சார்ந்த ஆசிரியர்கள் ( இணைப்பு - 1 ) Dr . Ambedkar Goverment Higher Secondary School , Gandhi Irwin Rd , Adikesavarpuram , Egmore , Chennai , Tamil Nadu 600008 என்கின்ற பள்ளி வளாகத்தில் உள்ள Hi - Tech Lab - ல் நடைபெறவிருக்கும் பயிற்சிக்கும் அடுத்த 16 மாவட்டங்களை சார்ந்த ஆசிரியர்கள் ( இணைப்பு - 2 ) Presidency Girls Higher Secondary School , No 100 , Gengureddy Road , Near F2 , Police Station , Egmore , Chennai , Tamil Nadu 600008 என்கின்ற பள்ளி வளாகத்தில் Hi - Tech Lab - ல் நடைபெறவிருக்கும் பயிற்சிக்குரிய இடத்திற்கு காலை 9 . 30க்குள்ளாக அனுப்பிவைக்குமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H